📅 Sunday, 23 August 2026 IST | ஆவணி 7, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sri Lanka August 23, 2026 03:03 PM

IND vs SL: உங்க பவுலர் மீது நீங்க நம்பிக்கை வைக்கலனா வேறு யார் வைப்பாங்க? கில்லுக்கு கையிப் கேள்வி

IND vs SL: உங்க பவுலர் மீது நீங்க நம்பிக்கை வைக்கலனா வேறு யார் வைப்பாங்க? கில்லுக்கு கையிப்  கேள்வி

IND vs SL: உங்க பவுலர் மீது நீங்க நம்பிக்கை வைக்கலனா வேறு யார் வைப்பாங்க? கில்லுக்கு கையிப் கேள்வி

கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், ஸ்பின்னர் குல்தீப் யாதவை இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் கையாண்ட விதம் குறித்து முன்னாள் வீரர் முகமது கைஃப் கேள்வி எழுப்பியுள்ளார். குல்தீப் யாதவுக்கு குறைந்த அளவில் ஓவர்கள் மட்டுமே வழங்கப்பட்டதாகவும், இது அவர் மீது கேப்டனுக்கு இருக்கும் நம்பிக்கைக் குறைவை காட்டுவதாகவும் கைஃப் விமர்சித்துள்ளார்.

காலேவில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இடதுகை சுழற்பந்து வீச்சாளர்களான மானவ் சுதர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 44 ஓவர்கள் வரை வீசி, மொத்தம் 14 விக்கெட்டுகளைப் பகிர்ந்து கொண்டனர். ஆனால், குல்தீப் யாதவ் இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து வெறும் 25 ஓவர்கள் மட்டுமே வீசி, ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார்.

இதுகுறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய முகமது கைஃப், "அவர் பயன்படுத்தப்பட்ட விதத்தில் இருந்து, குல்தீப் யாதவ் மீது ஷுப்மன் கில்லுக்கு போதுமான நம்பிக்கை இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. என்னைப் பொறுத்தவரை, குல்தீப் போன்ற தனித்துவமான பந்துவீச்சாளர்கள் எப்போதாவது தான் கிடைப்பார்கள். அவர்கள் வரலாற்றில் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே உருவாவார்கள்."

"வருங்காலத்தில் நமக்கு ரவீந்திர ஜடேஜாவுக்குப் பதிலாக மானவ் சுதரோ, அல்லது அஷ்வினுக்குப் பிறகு வாஷிங்டன் சுந்தரோ கிடைக்கலாம். ஆனால் குல்தீப் ஒரு அரிய பொக்கிஷம். ஒரு பந்துவீச்சாளருக்கு, குறிப்பாக ரிஸ்ட்-ஸ்பின்னருக்கு வாய்ப்பளிக்கும் போது, அவருக்கு நீண்ட ஸ்பெல்களை வழங்க வேண்டும். குறுகிய ஸ்பெல்கள் குல்தீப்புக்கு உதவாது. நீண்ட ஸ்பெல்கள் மட்டுமே தவறுகளைத் திருத்திக்கொள்ள வாய்ப்பளிக்கும்."

"ஆட்டத்தின் ரிதத்திற்கு வர அவர்களுக்கு நேரம் தேவைப்படுகிறது. ஆனால், ஷுப்மன் கில் அந்த ஆதரவை குல்தீப்புக்கு வழங்கவில்லை. வெளிநாட்டு மண்ணில் குல்தீப் தான் நமது முதல் தேர்வு என்ற ரவி சாஸ்திரியின் கருத்தை நான் ஒப்புக்கொள்கிறேன். பந்து திரும்பும் ஆடுகளங்களில் துல்லியம் மட்டுமே தேவை. ஒரே இடத்தில் தொடர்ந்து பந்து வீசினாலே விக்கெட்டைப் பெற்றுவிடலாம்."

"ஆனால் நியூசிலாந்து போன்ற நாடுகளில் இதுபோன்ற ஆடுகளங்கள் கிடைக்காது. சமதளமான ஆடுகளங்கள் அல்லது பந்து அதிகம் திரும்பாத ஆடுகளங்களில் குல்தீப் முக்கிய பங்கு வகிப்பார் என்று நான் நினைக்கிறேன். எனவே, கேப்டனாக கில்லும், அணி நிர்வாகமும் அவரது நம்பிக்கையை எப்போதும் உயர்த்திப் பிடிக்க வேண்டும்" என்று கைஃப் தெரிவித்தார்.

2018-ல் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான குல்தீப் யாதவ், இதுவரை 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 23.36 சராசரியில் 80 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 4 முறை நான்கு விக்கெட்டுகளையும், 5 முறை ஐந்து விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 5/40 ஆகும். இந்த ஆண்டு அவர் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 41-க்கும் அதிகமான சராசரியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.