📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports October 17, 2026 11:03 PM

IND vs WI: பேட்டிங்கில் மிரட்டிய இந்தியா.. இறுதியில் வென்ற மழை.. சமனில் முடிந்த தொடர்

IND vs WI: பேட்டிங்கில் மிரட்டிய இந்தியா.. இறுதியில் வென்ற மழை.. சமனில் முடிந்த தொடர்

IND vs WI: பேட்டிங்கில் மிரட்டிய இந்தியா.. இறுதியில் வென்ற மழை.. சமனில் முடிந்த தொடர்

பெங்களூர்: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணி 7.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் குவித்த போது மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது. டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். மழை மற்றும் ஈரபதமான ஆடுகளம் காரணமாக ஆட்டம் இரண்டு மணி நேரம் பாதிக்கப்பட்டதால், போட்டி தலா 9 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.

இப்போட்டிக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படாத நிலையில், இந்திய அணியில் நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் மயங்க் யாதவ் ஆகியோருக்குப் பதிலாக சிவம் துபே மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

குறைக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டி என்பதால் இந்திய பேட்டர்கள் தொடக்கம் முதலே அதிரடியாக ஆட முயன்றனர். அபிஷேக் சர்மா ஒரு சிக்சர் அடித்து வெளியேற, 3வது வீரராக களமிறங்கிய இசான் கிஷன், அதிரடி காட்டினார். 2வது ஓவரில் மட்டும் 26 ரன்களை இசான் கிஷன் விளாசினார். 10 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து அவர் வெளியேறினார்.

சஞ்சு சாம்சன் 16 ரன்கள் எடுத்திருந்தபோது ஷமார் ஸ்பிரிங்கர் பந்துவீச்சில் போல்டாகி ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர் 88 ரன்கள் அணி ஸ்கோராக இருந்தபோது கீமோ பால் பந்துவீச்சில் ஷமார் ஜோசப்பிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஷ்ரேயாஸ் ஐயரின் விக்கெட்டுக்குப் பிறகு களமிறங்கிய நமன் தீர், எதிர்கொண்ட முதல் பந்திலிருந்தே சிக்ஸர்களைப் பறக்கவிட்டு அதிரடி காட்டினார். கீமோ பால் வீசிய ஓவரில் தொடர்ச்சியாக சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்த நமன் தீர், ஷமார் ஸ்பிரிங்கர் பந்துவீச்சிலும் பிரம்மாண்ட சிக்ஸர் ஒன்றை விளாசினார். இதன் மூலம் இந்திய அணி 6.4 ஓவர்களிலேயே 100 ரன்களைக் கடந்து அதிரடி காட்டியது.

திலக் வர்மா ஒருமுனையில் நிதானமாக ஆட, நமன் தீர் தனது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியின் ஸ்கோரை விரைவாக உயர்த்தினார்.இந்திய அணி 7.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. நமன் தீர் 6 பந்தில் 24 ரன்கள் அடித்திருந்தார். இதில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி அடங்கும். மீண்டும் போட்டி தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது. இதன் முலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை இரு அணிகளும் 2 போட்டிகளை வென்று சமன் செய்தது. இதன் மூலம், கடந்த 24 ஆண்டுகளாக இந்திய மண்ணில் எந்த தொடரையும் வெஸ்ட் இண்டீஸ் வெல்லவில்லை என்ற சோகம் தொடர்கிறது.