ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீதான வரி ரத்து; அறிவித்தார் டிரம்ப்
-நமது சிறப்பு நிருபர்-
அமெரிக்காவில் இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில் டீசல் விலை கடுமையாக உயர்ந்தது. போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வந்த அதிபர் டிரம்ப் டீசல் வாங்குவதற்கு திடீரென ஒப்பந்தம் செய்தார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
தற்போது நாளை (அக்டோபர் 18) அமலுக்கு வர இருந்த, பொருளாதார நடவடிக்கையில் ரஷ்யாவுக்கு டிரம்ப் சலுகைகளை வழங்கினார். கச்சா எண்ணெய் கொள்முதல் மீதான தடைகளை டிரம்ப் நீக்கி இருப்பது, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு பெரும் நிம்மதி கிடைத்துள்ளது. 100 சதவீதம் இறக்குமதி வரியில் இருந்து நிவாரணம் கிடைத்தது.
அமெரிக்காவின் தேசிய நலனுக்காக என்று கூறி, ரஷ்ய எரிசக்தி ஏற்றுமதி தொடர்பான பொருளாதார தடைகள், கட்டுப்பாடுகள், வரிகளை அதிபர் டிரம்ப் ரத்து செய்துள்ளார். ரஷ்யாவுடன் டிரம்ப் நல்லுறவை வளர்த்து வருவதுடன், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை பகிரங்கமாக விமர்சித்து வருகிறார். உக்ரைனுக்கு ஒரு புதிய தலைவர் தேவை என்று கூறிவரும் வேளையில், ரஷ்யாவுக்கு டிரம்ப் சலுகைகளை வழங்கினார்.
அமெரிக்க பார்லிமென்ட் எம்பிக்கள், ஜனநாயக கட்சியினர், டிரம்ப் சலுகை வழங்கி இருப்பதுக்கு, கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். புடினிடம் டிரம்ப் பணம் பெற்றுள்ளார் என குற்றம்சாட்டினர். கலிபோர்னியா கவர்னர் கேவின் நியூசமின், ''யாரோ ஒருவர் புடினிடம் இருந்து பணம் பெற்றிருக்க வேண்டும்; யார் எவ்வளவு பணம் பெற்றுள்ளார்'' என விமர்சனம் செய்தார். ஜனநாயக கட்சியை சேர்ந்த அமெரிக்க பார்லிமென்ட் எம்பி, ''ரஷ்யா மீதான அனைத்து தடைகளையும் டிரம்ப் நீக்கிவிட்டார். புடினிடம் டிரம்ப் சரண் அடைந்து, உக்ரைன் கூட்டாளிகளுக்கு துரோகம் செய்துள்ளார்'' என்றார்.