📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports October 17, 2026 11:03 PM

இவ்வளவு அவசரம் தேவையா.. தேவையின்றி விக்கெட்டை கொடுத்த சஞ்சு, இஷான் கிஷன்.. இந்திய அணிக்கு சிக்கல்!

இவ்வளவு அவசரம் தேவையா.. தேவையின்றி விக்கெட்டை கொடுத்த சஞ்சு, இஷான் கிஷன்.. இந்திய அணிக்கு சிக்கல்!

இவ்வளவு அவசரம் தேவையா.. தேவையின்றி விக்கெட்டை கொடுத்த சஞ்சு, இஷான் கிஷன்.. இந்திய அணிக்கு சிக்கல்!

பெங்களூர்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5வது டி20 போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன்களை வேகமாக குவிக்க வேண்டும் என்ற அவசரத்தில் விக்கெட்டை பறிகொடுத்திருப்பது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அபிஷேக் சர்மா 6 ரன்களிலும், இஷான் கிஷன் 30 ரன்களிலும், சஞ்சு சாம்சன் 16 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 5வது டி20 போட்டி பெங்களூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மழை காரணமாக இந்தப் போட்டி 9 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக மாற்றப்பட்டது. இதனால் 2.4 ஓவர்கள் பவர் பிளே என்றும், அதிகபட்சமாக ஒரு பவுலர் 2 ஓவர்கள் வீசலாம் என்றும், ஒரு பவுலர் ஒரு ஓவர் மட்டுமே வீசலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதன்பின் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹாப் ஹோப் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் இந்திய அணிக்காக அபிஷேக் சர்மா - சஞ்சு சாம்சன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. கீமோ பால் வீசிய முதல் ஓவரிலேயே சிக்சர் அடித்த அபிஷேக் சர்மா, அடுத்த பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்து சென்றார்.

இதன்பின் களம் புகுந்த இஷான் கிஷன் 2வது ஓவரிலேயே 2 சிக்ஸ், 2 பவுண்டரிகள் உட்பட 24 ரன்களை விளாசி தள்ளினார். தொடர்ந்து அதிரடியாக விளையாட முயன்று ஷமார் ஜோசப் வீசிய வேகமான பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்று விக்கெட்டை பறிகொடுத்து 30 ரன்களுக்கு நடையை கட்டினார். இதன்பின் சஞ்சு சாம்சனுக்கு பேட்டிங் செய்யும் வாய்ப்பு அமைந்தது.

அவரும் சிக்ஸ், பவுண்டரி என்று விளாசி தள்ள, கடைசி வரை களத்தில் நிற்பார் என்று பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்பிரிங்கர் வீசிய 4வது ஓவரின் முதல் பந்திலேயே ஸ்டம்புகள் சிதற போல்டாகி வெளியேறினார். இந்த 3 பேட்ஸ்மேன்களும் அத்தனை பந்துகளையும் அட்டாக் செய்ய வேண்டும் என்ற நோக்கில் பேட்டிங் ஆடி விக்கெட்டை பறிகொடுத்து சென்றனர்.

இதனால் 4.1 ஓவர்களில் இந்திய அணி 66 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது. கொஞ்சம் நிதானமாக அட்டாக் செய்து ஆடி இருந்தாலும் இந்திய அணி சிறப்பாக பேட்டிங்கை பெரிய ஸ்கோர் அடித்து முடித்திருக்க முடியும். இதனால் இந்திய அணி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.