மானிய கோரிக்கையின்போது கட்சியை பற்றி பேசுவதா? கே.என்.நேரு கேள்வி
மானிய கோரிக்கையின்போது கட்சியை பற்றி பேசுவதா? கே.என்.நேரு கேள்வி
சென்னை: மானிய கோரிக்கை பதிலுரையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளித்து பேசுவதை விட்டுவிட்டு கட்சி குறித்து பேசுவதா என்று எதிர்க்கட்சி துணை தலைவர் கே.என்.நேரு கேள்வி எழுப்பினார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று உயர்கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்திற்கு அமைச்சர் விஸ்வநாதன் பதிலளித்து பேசியதாவது: 59 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டணி மந்திரி சபை வழங்கிய முதல்வருக்கு காங்கிரஸ் பேரியக்கம் நன்றி தெரிவித்துக்கொள்கிறது. 59 ஆண்டுகள் பல காலங்களை கடந்து சட்டமன்ற உறுப்பினரானோம், நாடாளுமன்ற உறுப்பினர்களானோம், மத்திய அமைச்சரவையில் அமைச்சர்களானோம். ஆனால் காங்கிரஸ் கட்சியின் நீண்ட நாள் கனவு தமிழக ஒருநாளாவது அமைச்சரவையில் இடம் கிடைத்துவிடாதா என்று ஏக்கம் இருந்தது. 1967ம் ஆண்டுக்கு பிறகு 59 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரசுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இடையில் எம்.எல்.ஏ.க்கள் ஆனாலும் அமைச்சரவையில் இடம் கிடைத்துவிடாதா? என்ற ஏக்கம் இருந்தது. கே.என்.நேரு (எதிர்க்கட்சி துணைத் தலைவர்): அவர் மானியத்தை விட்டுவிட்டு அரசியல் பேசுகிறார். அமைச்சரவையில் இடம் தருகிறேன் என்று கூறிவிட்டு தராமல் விட்டுவிடுவதுதான் தவறு. நாங்கள் தர முடியாது, தனித்து நிற்போம் என்றுதான் கூறினோம். சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்: தமிழக அரசியல் அனைவருக்கும் தெரிந்ததுதான். மானியக் கோரிக்கைக்குள் வாருங்கள்.
கே.என்.நேரு: அமைச்சர் மானியக் கோரிக்கை பற்றி பேசாமல், அவரது கட்சியைப் பற்றி பேசுவதை எவ்வளவு நேரம்தான் கேட்கமுடியும்? இவ்வாறு விவாதம் நடந்தது.