நடிக்காதே நயவஞ்சகா...! விஜய் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் : முரசொலி ஆவேசம்!
முரசொலி தலையங்கம் (10-09-2026)
நடிக்காதே நயவஞ்சகா...!
விஜய்யின் அசிங்கமான, கீழ்த்தரமான, நாற்றமடிக்கும் அரசியல் தமிழ்நாட்டையே மிகமிக மோசமான நிலைமைக்குக் கள்ளி வருகிறது. முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு நாட்டு மக்களுக்கு ஒரு நன்மையும் செய்யத் துப்பு இல்லாத விஜய், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் - திராவிட நாயகன் - தியாகத்தின் அடையாளமான மு.க.ஸ்டாலினை அசிங்கப்படுத்துவதுதான் தனது ஒரே வேலை எனச் செய்து வருகிறார்.
மிசாவில் கைது செய்யப்பட்டு ஓராண்டு காலம் சிறையில் இருந்ததை கொச்சைப்படுத்தி விஜய் காட்டிய சைகையும், அது தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமாரின் பொய் மூட்டைகளும் சட்டமன்றத்தில் அரங்கேறி சட்டமன்றத்தையே அசிங்கம் ஆக்கிவிட்டது.
ஓராண்டு காலம் அல்ல, ஒரு நாள் கூட ஜெயிலுக்குள் தாங்க மாட்டார் விஜய். சினிமாவில் சிறையில் இருக்கலாம். அடிவாங்குவதைப் போல நடிக்கலாம் ஆனால் உண்மையான சிறை, அதுவம் மிசா சிறை என்பது அனுபவித்துப் பார்க்- தவர்களுக்குத் தான் அந்த வேதனை தெரியம். அதைக் கொச்சைப்படுத்தும் போது நாம் அடையும் வேதனை அளவுக்கு அதிகமானது.
"முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் மகனாகிய மு.க.ஸ்டாலின் (வயது 23) சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு மாநிலத்தில் சட்டவிரோதத் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறார். இவர் கட்சியால் நடத்தப்படும் பல்வேறு பொதுக்கூட்டங்களில் பங்கேற்று, பிரிவினைவாத மற்றும் அவசரநிலைக்கு எதிரான கட்சியின் கொள்கைகளைப் பரப்பி வருகிறார். மாநில அரசின் சொந்தத் தவறுகளுக்கும் தோல்விகளுக்கும் மத்திய அரசே காரணம் என்று கூறி, மத்திய அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டு வருகிறார். மாநிலச் சட்டமன்றத்தின் பதவிக்காலம் நீட்டிக்கப்படாவிட்டால் தமிழ்நாட்டில் பரட்சி வெடிக்கும் என்று மிரட்டும் அளவிற்கு இவர் சென்றுள்ளார். இவர் தேச விரோத, அவசரநிலை எதிர்ப்பு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிரான வலுவான கருத்துக்களைக் கொண்டவர். இவர் தொடர்ந்து சுதந்திரமாக நடமாடுவது தேசிய ஒருமைப்பாட்டிற்கும் பொது அமைதியைப் பராமரிப்பதற்கும் கேடு விளைவிப்பதாக அமையும். எனவே, 'உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம், 1971'-இன் பிரிவு 3(1) (a) (ii) மற்றும் பிரிவு 3(1) (e) ஆகியவற்றின் கீழ் இவரைக் காவலில் வைப்பது அவசியமாகும்” என்று 1-3-1976 அன்று கூடுதல் காவல் துறைத் தலைவர் மற்றும் காவல் ஆணையர் உத்தரவிட்டு கைது செய்யப்பட்டார் தலைவர் மு.க.ஸ்டாலின். நிர்மல்குமாருக்கு தமிழ் வாசிக்கத் தெரியமானால் இதைப் படிக்க வேண்டும்.
மிசாவில் கைதான போது -அன்றைய இரவு எப்படி இருந்தது என்பதை சிட்டிபாபு தனது சிறை டைரியில் எழுதி இருப்பார்...
"அன்றிரவு ஒரு மணி இருக்கும். என் தம்பி ஸ்டாலின் சிறைக்கு அழைத்து வரப்பட்டான். பாவம் பூது திருமணப் பிள்ளை. முழு வாழ்வை அவன் பெறுவதற்கு முன்னால் அவனுக்கு முள்வேலி. சிறை உணவை தம்பி (ஸ்டாலின்) சுவைத்தான். பசியோ என்றுகூட எண்ணினேன். இல்லை பழக்கப்படுத்திக் கொள்ளவே என்றான். இதுதானே இனிமேல் உணவு நமக்கு என்று என்னைக் கேட்டான்.