ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1800 குறைவு
சென்னை: சென்னையில் இன்று (செப் 02) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1800 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 600 ரூபாய்க்கும், கிராமுக்கு 225 ரூபாய் குறைந்து 13,950 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 14,370 ரூபாய்க்கும், சவரன், 1,14,960 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 260 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று காலை தங்கம் விலை கிராமுக்கு, 15 ரூபாய் உயர்ந்து, 14,385 ரூபாய்க்கு விற்பனை யானது. சவரனுக்கு, 120 ரூபாய் அதிகரித்து, 1,15,080 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, 255 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று மாலை தங்கம் விலை கிராமுக்கு, 210 ரூபாய் சரிவடைந்து, 14,175 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
சவரனுக்கு, 1,680 ரூபாய் சரிவடைந்து, 1,13,400 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு, 5 ரூபாய் குறைந்து, 250 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதையடுத்து, நேற்று ஒரே நாளில் மட்டும், தங்கம் சவரனுக்கு 1,560 ரூபாய், வெள்ளி கிலோவுக்கு, 10,000 ரூபாய் சரிவடைந்தன.
இந்நிலையில் இன்று (செப் 02) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1800 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 600 ரூபாய்க்கும், கிராமுக்கு 225 ரூபாய் குறைந்து 13,950 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.