பா.ஜ., நயினார் மீது சட்ட நடவடிக்கை: த.வெ.க., துணை பொதுச்செயலர் உறுதி
திருநெல்வேலி: ''பெண்கள் குறித்து அவதுாறாக பேசிய தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தமிழக வெற்றிக் கழக துணைப் பொதுச்செயலர் ஜாகிர் உசேன் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் நேற்று அவர் அளித்த பேட்டி: சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் த.வெ.க., போட்டியிட்டதை போல், உள்ளாட்சித் தேர்தலிலும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற, கட்சி பணிகளை மேற்கொள்கிறோம்.
பெண்களை தாய்க்கு மேலாக மதித்து பாதுகாப்பதோடு, அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக முதல்வர் விஜய் இருந்து வருகிறார். த.வெ.க., அரசில், பெண்கள் தொடர்பான பிரச்னைகளில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெண்கள் குறித்து இழிவாக பேசிய நயினார் நாகேந்திரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல்வர் குறித்து பேச யாருக்கும் தகுதியில்லை. முதல்வரின் தாய் குறித்து நயினார் நாகேந்திரன் பேசிய விவகாரத்தில் சட்டப்படி அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். விரைவில் சட்டம் தன் கடமையை செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.