Tamil Nadu
August 27, 2026 03:03 AM
திருத்தணி முருகன் கோயிலில் நாளை மதியம் முதல் மாலை வரை தரிசனம் ரத்து
திருத்தணி முருகன் கோயிலில் நாளை மதியம் முதல் மாலை வரை தரிசனம் ரத்து
திருத்தணி: தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்ட பகுதிகளில் நாளை (27ம் தேதி) ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, பிராமண சமூகத்தை சேர்ந்தவர்கள் புதிய பூணூல் அணிந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதேபோல், திருத்தணி முருகன் கோயில் அர்ச்சகர்களும் நாளை (27ம் தேதி) புதிய பூணூல் அணியும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து, திருத்தணி முருகன் கோயிலில் நாளை மதியம் 12 மணி முதல் மாலை 4 மணிவரை பக்தர்களுக்கு சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. எனவே, நாளை மாலை 4 மணிக்குமேல் அனைத்து பக்தர்களும் வழக்கம் போல் சாமி தரிசனம் செய்யலாம் என்று திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
Tamil Nadu