📅 Thursday, 27 August 2026 IST | ஆவணி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 27, 2026 11:04 AM

தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முதல்

தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முதல்

இடதுசாரி இயக்கங்களை ஒடுக்கும் நோக்கில் செயல்பட்ட தலைமைச் செயலாளர் மற்றும் குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தமிழக முதல்-அமைச்சர் விஜய்க்கு சி.பி.எம். மாநில செயலாளர் பெ.சண்முகம் கடிதம் எழுதி உள்ளார்.

சுற்றறிக்கை

இதுதொடர்பான அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

விளக்கம் அவசியம்

இது உரிய முன்னுரிமை என்றும் மிக அவசரம் என்றும் வகைப்படுத்தப்பட்டு, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கை (action taken report) கோரப்பட்டுள்ளது. இது முற்றிலும் சட்டவிரோதமானதும், அரசமைப்பு சட்டம் வழங்கியுள்ள போராட்ட உரிமையை மறுப்பதும் ஆகும். இது திட்டமிட்டு இடதுசாரி அமைப்புகளைக் குறி வைக்கிற செயல் என்கிற முறையில் எங்களது கடும் கண்டனத்தைத் தெரியப்படுத்துகிறோம். அரசின் அதிகார கட்டமைப்பில் மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கும் தலைமைச் செயலாளர் எடுக்கும் முடிவு அரசின் முடிவாகவே கருதப்படும். எனவே, இதுகுறித்து தாங்கள் விளக்கம் அளிப்பது அவசியம்.

தலைமை செயலாளர் மீது நடவடிக்கை

ஆனால், உயர் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அவர்களின் முடிவை கல்லூரிகளுக்கு அனுப்பி வைத்த இணை இயக்குநரிடம் விளக்கம் கேட்டுவிட்டோம் என்று சொல்வது எவ்விதத்திலும் ஏற்கத்தக்கதல்ல; பொருத்தமானதும் அல்ல.

அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது

உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் சட்டமன்றத்தில் மன்னிப்பு கோரியிருக்கிறார். நாங்கள் யாரிடமும் மன்னிப்பு கோர வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை. மாறாக, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை என்பதையே வலியுறுத்தியிருக்கிறோம்; இப்போதும் வலியுறுத்துகிறோம். இதுகுறித்து அரசு தரப்பிலிருந்து இதுவரையிலும் பொறுப்பான பதில் ஏதும் சொல்லப்படவில்லை.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை வட்டாட்சியர், அந்த வட்டத்திற்குட்பட்ட CPI(M), CPI கட்சிகளின் உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள் சேகரிக்க கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். இது நேரடியான அச்சுறுத்தல் மட்டுமல்ல, அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதும், தனது பதவியை தவறாக பயன்படுத்துவதும் ஆகும்.

இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லாமல் அவரது பயிற்சி காலம் முடிந்ததால் இடமாறுதல் செய்வதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்திருந்தார். பிறகு அவருக்கு அரசு ஊழியர் நடத்தை விதிகள் 17 A-யின் கீழ் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதாவது இது சிறு குற்றமாக மட்டுமே அரசால் கருதப்பட்டு மென்மையாக அணுகப்படுகிறது.

பாதுகாப்பதற்கான முயற்சி

தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.