📅 Thursday, 27 August 2026 IST | ஆவணி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 26, 2026 04:00 PM

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை - சட்ட திருத்தத்திற்கு ஆளுநர் ஒப்புதல்

இந்த புதிய விதி, சட்டத்திருத்தம் வெளியிடப்படுவதற்கு முன்பே அறிவிக்கப்பட்ட முன்னுரிமை காலிப்பணியிடங்களுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published : August 26, 2026 at 2:06 PM IST

சென்னை: தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கும் சட்டத் திருத்தத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கும் வகையில் 20 சதவீதம் நேரடி பணி நியமனம் செய்வதற்கான சட்டம் 2010 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் அடிப்படையில் ஏற்கனவே அரசு பணியில் இருந்து கொண்டே, வேறு அரசு வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறாரா? என்பதை ஆராயாமல், தமிழ் வழிக் கல்வி என்பதன் அடிப்படையிலேயே அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்பட்டு வந்தது.

இதனை தடுக்கும் பொருட்டு, ஏற்கனவே அரசுப் பணிகளில் உள்ளவர்கள் தமிழ் வழியில் பயின்றவர்கள் என்ற அடிப்படையில் முன்னுரிமை பெற தகுதியற்றவர்கள் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனையடுத்து, முழுமையாக தமிழ் வழியில் பயின்று, புதிதாக அரசுப் பணிகளில் சேருவோருக்கு 20 சதவீதம் முன்னுரிமை அடிப்படையில், நேரடி பணி நியமனம் வழங்கும் சட்ட திருத்த மசோதாவானது கடந்த ஆண்டு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த சட்ட திருத்தத்திற்கு ஆளுநர் அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.

திருத்தப்பட்ட சட்டத்தின் படி, அரசுப் பணிகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்காக ஒதுக்கப்படும் முன்னுரிமை காலிப்பணியிடத்தில் ஒருவர் ஏற்கனவே முன்னுரிமை அடிப்படையில் நியமனம் பெற்றிருந்தால், மீண்டும் அதே வகையான முன்னுரிமை காலிப்பணியிடங்களுக்கு போட்டியிட முடியாது.

இதன் மூலம், தமிழ் வழியில் படித்தவர்களுக்கான முன்னுரிமை சலுகையை ஒருமுறை பயன்படுத்தி அரசுப் பணியில் சேர்ந்தவர்கள், அதே முன்னுரிமையை மீண்டும் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், அதிக ஊதிய நிலை கொண்ட பதவிக்கு இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, ஏற்கனவே முன்னுரிமை அடிப்படையில் நியமனம் பெற்ற ஒருவர், அதை விட அதிக ஊதிய நிலை கொண்ட பதவிக்கான முன்னுரிமை காலிப்பணியிடத்தில் போட்டியிடலாம்.

இதனிடையே, 2010-ஆம் ஆண்டு செப்டம்பர் 7-ஆம் தேதி முதல், இந்தத் திருத்தச் சட்டம் அரசிதழில் வெளியிடப்படும் நாள் வரையிலான காலகட்டத்தில் முன்னுரிமை காலிப்பணியிடங்கள் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்புகள், செய்யப்பட்ட நியமனங்கள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட முன்னுரிமை நியமனங்கள் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகளுக்கு சட்டரீதியான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

நேரடி நியமனம்