📅 Saturday, 08 August 2026 IST | ஆடி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 06, 2026 03:33 AM

தமிழக பட்ஜெட்: அரசின் முக்கிய துறைகளுக்கான நிதிகளை குறைத்தது ஏன்?

தமிழக பட்ஜெட்: அரசின் முக்கிய துறைகளுக்கான நிதிகளை குறைத்தது ஏன்?

தமிழக பட்ஜெட்டில் அரசின் முக்கிய துறைகளுக்கான நிதியை குறைத்தது ஏன் என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார் இது தொடர்பாக, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:- பட்ஜெட்டை குறைப்பது, தரத்தில் சமரசம் செய்வதற்கு சமம்!

குறைவாக நிதி ஒதுக்கீடு

கடந்த ஆண்டின் இடைக்கால பட்ஜெட்டில்,

- ரூ. 48,534 கோடியாக இருந்த பள்ளிக்கல்வி துறைக்கான நிதி, இந்த ஆண்டு ரூ. 44,527 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

- உயர்கல்வித் துறைக்கான நிதி ரூ. 8,505 கோடியில் இருந்து ரூ. 8,393 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

- நீர்வளத்துறைக்கான நிதி ரூ. 10,076 கோடியில் இருந்து ரூ. 9,264 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

- எரிசக்தி துறைக்கான நிதி ரூ. 18,091 கோடியில் இருந்து ரூ. 15,828 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

- கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறைக்கான நிதி ரூ. 1,943 கோடியில் இருந்து ரூ. 1,678 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

சந்தேகங்கள்

இப்படி முக்கியமான துறைகளுக்கெல்லாம் நிதி ஒதுக்கீட்டை குறைத்த தவெக அரசு, தமிழகத்தின் கடன் மட்டும் ரூ.1.22 லட்சம் கோடியிலிருந்து ரூ.1.73 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக கணக்கு காட்டுவது பல்வேறு சந்தேகங்களை கிளப்புகிறது.

நிதிகளை குறைத்தது ஏன்?

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.