தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ள நலத்திட்டங்கள் பெயரை மாற்ற வேண்டாம்: வீரபாண்டியன் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ள நலத்திட்டங்கள் பெயரை மாற்ற வேண்டாம்: வீரபாண்டியன் வலியுறுத்தல்
திருவண்ணாமலை: தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் இணைப்பு சங்கமாக, தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தை இணைக்கும் விழா திருவண்ணாமலையில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் அளித்த பேட்டி: ஏழை, பணக்காரர் இடைவெளி அதிகரித்து இருக்கிறது. படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும்.
வேலையில்லாத காலத்தில் நிவாரணம் வழங்க வேண்டும். வேலை தேடி புலம்பெயரும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேகதாது அணை கட்டுவது சட்டவிரோதமானது. காவிரி நதிநீர் விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும். தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ள நலத்திட்டங்கள் தொடர வேண்டும். எக்காரணம் கொண்டும் நலத்திட்டங்களை நிறுத்தக்கூடாது. திட்டங்களின் பெயர்களை மாற்றக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.