📅 Friday, 14 August 2026 IST | ஆடி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 13, 2026 07:04 AM

 தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் தமிழக அரசு உத்தரவு

 தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் தமிழக அரசு உத்தரவு

சென்னை: பொது நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை கட்டாயமாக்கி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின், கடந்த ஜூலை மாதம் 9ம் தேதியிட்ட கடிதத்தில், பொது நிகழ்ச்சிகளில் மாநில பாடல் பாடப்படுவது குறித்து தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், கடந்த 10ம் தேதி பொது நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை முதலில் பாட வேண்டும் என்பதை கட்டாய மாக்கி சட்டசபையில், தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைகள், அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் பொது நிகழ்ச்சிகளில், நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன், தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், 'தமிழ்மொழிக்கும், தமிழர் பண்பாட்டிற்கும் செலுத்தப்படும் மரியாதையின் வெளிப்பாடாக தமிழ்த்தாய் வாழ்த்து, கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணையை தலைமை செயலர் சாய்குமார் பிறப்பித்துள்ளார்.