📅 Thursday, 13 August 2026 IST | ஆடி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 12, 2026 12:04 AM

தொகுதி மறுவரையறை எதிர்த்து தனித்தீர்மானம்: ஆக.12ல் சட்டசபையில் முன்மொழிகிறார் முதல்வர் விஜய்

தொகுதி மறுவரையறை எதிர்த்து தனித்தீர்மானம்: ஆக.12ல் சட்டசபையில் முன்மொழிகிறார் முதல்வர் விஜய்

சென்னை: தொகுதி மறுவரையறை எதிர்த்து ஆக.12ம் தேதி சட்டசபையில் தனித் தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிகிறார்.

பார்லிமெண்டில் கடந்த ஏப்ரல் மாதம், நீட்டிக்கப்பட்ட பட்ஜெட் கூட்டத்தொடரில் தொகுதி மறு வரையறை மசோதா கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்த மசோதா தோற்கடிக்கப்பட்டது.

மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் இத்தருணத்தில் திருத்தப்பட்ட தொகுதி மறு வரையறை மசோதாவை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மசோதாவால் தமிழகத்திற்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து விவாதிக்க, தமிழக எம்பிக்கள் கூட்டம் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இரு அவைகளையும் சேர்த்து மொத்தம் உள்ள 57 எம்பிக்களில், 19 பேர் மட்டுமே இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்துவிட்டன. கூட்டத்தில், தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களின் உரிமையை நிரந்தரமாக பாதுகாக்க தமிழக சட்டசபையில் அரசின் தனித்தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி இந்த தனித்தீர்மானம் ஆக. 12ம் தேதி சட்டசபையில் முன்மொழிப்படுகிறது. தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிகிறார். தற்போதுள்ள லோக்சபா எம்பிக்களின் எண்ணிக்கையான 543 என்ற அளவிலேயே நிரந்தரமாக வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.