📅 Saturday, 28 November 2026 IST | கார்த்திகை 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics November 28, 2026 07:32 AM

1 முதல் 12

1 முதல் 12

மணிகண்டன், எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில் பயனுள்ள தகவல்களையும் புதிய சிந்தனைகளையும் கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்கி வருகிறார்.

அரசு/ அரசு உதவி பெறும்/தனியார் பள்ளிகளில் கல்வி பயிலும் 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2026 -2027 ஆம் ஆண்டு கல்வியாண்டிற்கான அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

24-12-2026 முதல் 03-01-2027 வரை அனைத்து மாணவர்களுக்கும் அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது. விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் ஏதும் நடத்தக்கூடாது என தெரிவிக்கப்படுகிறது.அரையாண்டு விடுமுறை முடிந்து 04.01.2027, திங்கள்கிழமை அன்று அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்படும்.

அரையாண்டு விடுமுறை முடிந்து, 04-01-2027, திங்கட்கிழமை அன்று பள்ளிகள் திறக்கும். பள்ளிகள் திறக்கும் அன்றே, 1 முதல் 7-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 3-ஆம் பருவ புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும். மேலும், அரையாண்டு தேர்வில் மாணவர்கள் எழுதிய திருத்தப்பட்ட விடைத்தாள்களை வழங்கி, உரிய பதிவேடுகளில் மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும் என அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வு தேதி விவரம் :

1 முதல் 5-ம் வகுப்பு வரை - டிசம்பர் 16 முதல் 23 வரை

6 முதல் 9-ம் வகுப்பு வரை - டிசம்பர் 14 முதல் 23 வரை

10, 11, 12-ம் வகுப்பு - டிசம்பர் 10 முதல் டிசம்பர் 23 வரை

அரையாண்டு தேர்வு அட்டவணை விவரம்:

டிசம்பர் 14 - தமிழ்மொழி தேர்வு

டிசம்பர் 15 - ஆங்கிலம்

டிசம்பர் 16 - உடற்கல்வி தேர்வு

டிசம்பர் 17 - கணிதம்

டிசம்பர் 18 - விருப்ப மொழி

டிசம்பர் 21 - அறிவியல்

டிசம்பர் 22 - சமூக அறிவியல்

டிசம்பர் 23 - பள்ளி வேலை நாள்

டிசம்பர் 16 - விருப்ப மொழி

டிசம்பர் 18 - உடற்கல்வி

டிச.16 - கணிணி அறிவியல், வேதியியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்

டிசம்பர் 17 - இயற்பியல், பொருளியல், வேலைவாய்ப்பு திறன்கள்

டிசம்பர் 18 - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக்கணிதம்

டிச. 21 - கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், வேளாண் அறிவியல்

டிசம்பர் 22 - வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்

24-12-2026 முதல் 3-1-2027 வரை அனைத்து மாணவர்களுக்கும் 11 நாட்கள் அரையாண்டு விடுமுறை விடப்படுவதாகவும், விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் ஏதும் நடத்தக்கூடாது எனவும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் நரேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும், அரையாண்டு விடுமுறை முடிந்து 4.1.2027 திங்கள்கிழமை அன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கும் அன்றே 1 முதல் 7ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 3ஆம் பருவ புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.