Politics
November 26, 2026 09:03 PM
5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு
இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு, அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர்கள் ராஜினாமா செய்த கரூர், விராலிமலை பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த ஐந்து தொகுதிகளிலும் தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு தேர்தல் நடத்த இடைக்கால தடை விதித்தனர். இதில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நாளை ( நவம்பர் 27) காலை 10:30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
Politics