📅 Monday, 24 August 2026 IST | ஆவணி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 23, 2026 05:01 PM

ஐட்டம் பாடலுக்கு நோ.. என் கொள்கையை பலிகொடுக்க மாட்டேன்.. நடிகர் சித்தார்த் அதிரடி

ஐட்டம் பாடலுக்கு நோ.. என் கொள்கையை பலிகொடுக்க மாட்டேன்.. நடிகர் சித்தார்த் அதிரடி

சென்னை: தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் வித்தியாசமான கதை தேர்ந்தெடுத்து நடித்து வரும் முன்னணி நடிகர் சித்தார்த், சினிமாவையும் தாண்டி சமுதாய சிக்கல்கள் மற்றும் தன் கொள்கைகள் குறித்து எப்போதும் வெளிப்படையாகப் பேசக்கூடியவர், பேட்டி ஒன்றில் ஐட்டம் பாடல்களில் நடிக்க மாட்டேன் கூறியுள்ளார்.

பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான சித்தார்த் அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு, காவியத் தலைவன் என பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழைத் தாண்டி தற்போது பாலிவுட்டில் பிரபலமான நடிகராக மாறி இருக்கிறார். இவர் 'ஆபரேஷன் சேஃபத் சாகர்' என்கிற வெப் தொடரில் நடித்துள்ளார். ஓனி சென் இயக்கத்தில் ஜாமி ஷெர்கில், சித்தார்த், தியா மிர்சா, பிரஜக்தா கோலி, அபய் வர்மா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்து இருக்கும் இந்த தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 7ந் தேதி வெளியானது.

எனக்கென சில கொள்கைகள் உண்டு: ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற இந்த தொடரில் நடித்த அனுபவம் குறித்து பல விஷயத்தை பகிர்ந்த கொண்ட சித்தார்த். ஒரு நடிகனாக எனக்கு சில அறநெறிகளும் கொள்கைகளும் (Ethics) உண்டு. பெண்களை வெறும் போகப் பொருளாகக் காட்டும் எந்தவொரு திரைப்படக் உள்ளடக்கத்திலும் அல்லது ஐட்டம் பாடல்களிலும் நான் ஒருபோதும் பங்குபெற மாட்டேன். திரையுலகில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காகத் தனது சுயமரியாதையையோ, கொள்கைகளையோ விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதில் சித்தார்த் மிகவும் தெளிவாக இருக்கிறார்.

குவியும் பாராட்டு: ஆனால், இன்றைய சினிமாவில் ஐட்டம் பாடலும், பெண்களை மையப்படுத்தும் காட்சிகளும், ஆபசங்களும் அதிகமாக உள்ளன. அந்த காட்சியால் மட்டுமே படம் ஓடிவிடும் என்ற எண்ணத்தில் அதிகபடங்களில் இதுபோன்ற காட்சிகள் இடம்பெருகின்றன. சித்தார்த்தின் இந்த உறுதியான பேச்சு, வெறும் சினிமா உலகிற்கு மட்டுமல்லாமல், சமுதாயத்திற்கும் பெண்களுக்கான மரியாதையை வலியுறுத்தும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதுபோன்ற எண்ணம் மற்ற நடிகர்களுக்கும் வரவேண்டும் என நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.