அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நிலநடுக்கம்; விமான நிலையத்திலும் பாதிப்பு
-நமது நிருபர்-
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் மன்ஹாட்டன் கடற்கரைக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 5 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மன்ஹாட்டன் கடற்கரையிலிருந்து மேற்கே 6 கிலோமீட்டர் தொலைவில் கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. விமான நிலையத்தில் ஜன்னல்களை நொறுக்கியது. நிலநடுக்கம் ஏற்பட்ட நேரத்தில் தரையிறங்க வந்த டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் உட்பட சில விமானங்கள் பாதுகாப்பு கருதி தரையிறங்குவதைத் தவிர்த்து மீண்டும் சிறிது நேரம் வானில் பறந்தன.
அமெரிக்காவின் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை (நவம்பர் 28, 2026) காலை 9:30 மணியளவில் 5.0 ரிக்டர் அளவில் முதல் நிலநடுக்கமும், அதனைத் தொடர்ந்து 11:41 மணியளவில் 4.6 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டன. சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. காயங்கள் அல்லது பெரிய சேதங்கள் குறித்த இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.