Bethlehem Kudumba Unit Prashanth's Review
சென்னை: நிவின் பாலி, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் பெத்லேகம் குடும்ப யூனிட். இந்தப் படமானது கடந்த 21ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. கிரிஷ் ஏடி என்பவர் இயக்கியிருக்கிறார். படத்துக்கு ரசிகர்களிடையே சுமாரான வரவேற்பு கிடைத்திருக்கும் சூழலில்; பிரபல திரை விமர்சகரான பிரசாந்த் தன்னுடைய யூடியூப் சேனலில் விமர்சனத்தை பகிர்ந்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "கிரிஷ் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். மலையாள படங்களை நிறைய விமர்சனம் செய்வதில்லை என்று என் மீது புகார்கள் இருக்கின்றன. வேண்டுமென்றே எதையும் நான் செய்வது இல்லை. பெரிதாக அந்தப் படங்களை பார்ப்பதில்லை. இந்தப் படத்தை கடந்த சனிக்கிழமை பார்த்தேன். எனக்கு ரொம்ப நெருக்கமாகவே இருந்தது படம்.
நிவின் பாலிக்கு நன்றி: முதலில் நிவின் பாலிக்கு நன்றி சொல்ல வேண்டும். ஹீரோக்கள் உடல் எடை கூடிவிட்டாலே ஏதேதோ பேசுவார்கள். ஆனால் சாமானியர்களில் பத்து பேருக்கு ஆறு பேராவது குண்டாகத்தான் இருக்கிறோம். ஆனால் அதெல்லாம் நடிப்புக்கு பிரச்னை இல்லை; நடித்தால் போதும் என்பதை உணர்த்தியிருக்கிறார் நிவின். அவருக்கு உடல் எடை கூடியதை பற்றி யாருக்கும் எந்த கவலையும் இல்லை. அவரிடம் பெரிய ஆரா இருக்கிறது. அவருக்கு பல படங்கள் தோல்வியடைந்திருக்கின்றன.
மீண்டும் நிரூபித்திருக்கிறார்: இருப்பினும் அவர் அதையெல்லாம் நினைத்து கவலைப்பட்டது இல்லை. இப்போது அவர் கம்பேக் கொடுத்திருக்கிறார். 100 கோடி ரூபாயை அடித்து தூக்கிக்கொண்டு போகலாம். மமிதா பைஜூவை இதில் அழகாக பார்க்கிறோம். அந்த கேரக்டராகவே இருக்கிறார். ரொம்ப பக்குவமான காதல். இதில் ஃபோர்டு காரையும் காதல் செய்ய வைக்கிறார்கள்.கதைக்கு மனிதர்களின் எமோஷன் போதும் என்பதை மீண்டும் இயக்குநர் நிரூபித்திருக்கிறார்.
அவர்தான் தலைவர்: ஒருதுளிகூட வன்முறை இல்லை. தமிழ், மலையாளம் என்று யோசிக்க வேண்டாம். குடும்பமாக போய் உட்கார்ந்தால் சந்தோஷமாக வெளியே வருவீர்கள். அதற்கு முக்கிய காரணம் நிவின். உடன் நடித்தவர்கள் எல்லாம் ஜாலியாக இருக்கிறார்கள். கதை ரொம்ப எளிமைதான். ஆனால் இதயத்தை உருக வைக்கிறது. குண்டாக இருப்பவர்களின் க்ளப்புக்கு நிவின்தான் தலைவர். உடல் ஒரு தடையே இல்லை. நீ யார் என்ற கேரக்டர்தான். இதில் அவர் நடிக்கவில்லை; அவராகவே இருக்கிறார்.
மமிதா பைஜூ அருமை: அவரிடம் நீங்கள் நெகட்டிவிட்டியை பார்க்கவே முடியாது. அப்படியே அது படத்தில் இருக்கிறது. பிரேமம், பிரேமலு படங்களை கொண்டாடியிருந்தால் இதையும் கொண்டாடுவார்கள். விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் எல்லா மமிதா நன்றாக நடித்திருக்கிறார்தான். அதெல்லாம் ஒரு கேரக்டராக தெரிந்தது. இதில் பயங்கரமான ஆர்ட்டிஸ்ட்டாக மமிதா தெரிகிறார்.
சமமான காதல்: இடைவேளை காட்சியில் எல்லாம் அவர் கொடுத்த எக்ஸ்பிரெஷன்கள் எல்லாம் அருமை. உண்மையில் நடந்தது மாதிரிதான் தோன்றியது. இது கண்டிப்பாக பெரிய ஹிட்டாகும். குடும்பத்துடன் சென்று பாருங்கள் இதில் அழகான காதல் கதை. பிரேமத்துக்கு இந்தப் படம் சமமான காதலை கொடுத்திருக்கிறார்கள்" என்றார். முன்னதாக, சில வாரங்களுக்கு முன்பு மமிதா பைஜூ நடிப்பில் வெளியாகியிருந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் மெகா ஹிட்டானது. அதுமட்டுமின்றி அவருக்கும் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. இப்போது பெத்தலேகம் குடும்ப யூனிட் படமும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று அவருக்கு மேற்கொண்டு பாராட்டுக்களை பெற்றுக்கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.