📅 Wednesday, 14 October 2026 IST | புரட்டாசி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 14, 2026 08:03 AM

சென்னை: உயிரிழந்த 2 தொழிலாளிகளுக்கு தலா ரூ.30 லட்சத்துக்கான காசோலை

சென்னை: உயிரிழந்த 2 தொழிலாளிகளுக்கு தலா ரூ.30 லட்சத்துக்கான காசோலை

சென்னையில் கிணற்றின் தொட்டிக்குள் இறங்கியபோது மயங்கி விழுந்து இறந்த 2 தொழிலாளிகளின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சத்துக்கான காசோலையை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் சிவா வழங்கினார்.

2 தொழிலாளிகள் கிணற்றுக்குள் மயங்கி விழுந்து உயிரிழப்பு

சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலம், தென்றல்நகர் 3-வது தெருவில் நேற்று (12.10.2026) மழைநீர் தேங்கும் கிணற்றுக்குள் மோட்டார் பழுது பார்க்கும் பணி மேற்கொள்ள தொட்டிக்குள் இறங்கிய பொழுது மயங்கி விழுந்து நவீன்குமார், அஸ்மத்பாஷா ஆகிய 2 தொழிலாளிகள் உயிரிழந்தனர்.

2 பேருக்கு தலா ரூ.30 லட்சம் நிவாரணம் வழங்கல்

கிணற்றுக்குள் மயங்கி விழுந்து உயிரிழந்த 2 தொழிலாளிகளின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்யின் உத்தரவுப்படி, நிவாரணத் தொகையாக, தலா ரூ.30 லட்சத்திற்கான காசோலையினை தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் சிவா இன்று (13.10.2026) வழங்கினார். அப்போது தண்டையார்பேட்டை மண்டல அலுவலர் ராஜ்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.