📅 Wednesday, 09 September 2026 IST | ஆவணி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 09, 2026 03:03 AM

சிஎஸ்கேவின் புதிய தலைமை பயிற்சியாளர்... ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு அடுத்த வாரம் விடை?

சிஎஸ்கேவின் புதிய தலைமை பயிற்சியாளர்... ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு அடுத்த வாரம் விடை?

அடுத்த வார இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பதவி விலகல்

ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து ஸ்டீபன் பிளெமிங் சமீபத்தில் விலகினார்.

அடுத்த பயிற்சியாளர் யார்?

ஸ்டீபன் பிளெமிங் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து, சென்னை அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளர் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய தலைமைப் பயிற்சியாளர் பதவிக்காக மகேந்திர சிங் தோனி, ராகுல் டிராவிட், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஹேமங் பதானி ஆகியோரின் பெயர்கள் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. இருப்பினும், இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் இதுவரை எந்த அதிகாபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

அடுத்த வாரம்?

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் இறுதியில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் அடுத்த ஆண்டிற்கான வீரர்கள் ஏலம் நடைபெற வாய்ப்புள்ள நிலையில் சென்னை அணி அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.