📅 Wednesday, 09 September 2026 IST | ஆவணி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu September 09, 2026 03:03 AM

மாதம்பட்டி ரங்கராஜுடன் சேர்ந்தது பற்றி மனம் திறந்த ஜாய் கிரிஸில்டா.. அதுதான் காரணமாம்

மாதம்பட்டி ரங்கராஜுடன் சேர்ந்தது பற்றி மனம் திறந்த ஜாய் கிரிஸில்டா.. அதுதான் காரணமாம்

சென்னை: ஜாய் கிரிஸில்டாவை ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்துகொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்; திடீரென அவரிடமிருந்து விலகிவிட்டார். பல போராட்டங்களுக்கு பிறகு இப்போது மீண்டும் சேர்ந்திருக்கிறார்கள். இந்நிலையில் கணவருடன் சேர்ந்தது குறித்து ஜாய் கிரிஸில்டா சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

ஜாய் கிரிஸில்டா முதலில் ஒரு திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். அவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். மாதம்பட்டி ரங்கராஜும் ஸ்ருதி என்பவரை திருமணம் செய்திருந்தார். சூழல் இப்படி இருக்க இவர்கள் இரண்டு பேரும் ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்கள். ஜாயும் கர்ப்பமாகிவிட்டார். ஒரு மகனையும் பெற்றெடுத்தார். ஆனால் திடீரென அவரிடமிருந்து விலக தொடங்கினார் மாதம்பட்டி. உடனே கடுப்பான கிரிஸில்டா பொதுவெளிக்கு வந்து தங்களுடைய திருமண விவகாரத்தை போட்டுடைத்துவிட்டார். அதனையடுத்து நீண்ட சட்ட போராட்டம் பல மாதங்களாக நடைபெற்றது.

டி.என்.ஏ டெஸ்ட்: ஜாய் கிரிஸில்டாவுக்கு தன்னுடைய வாழ்க்கையில் இடம் இல்லை என்பதில் உறுதியாக இருந்த மாதம்பட்டியார்; டி.என்.ஏ டெஸ்ட் கோரிக்கையை வைத்தார். அப்படி எடுக்கப்பட்ட டிஎன்ஏ டெஸ்ட்டில் ஜாய் கிரிஸில்டாவுக்கு பிறந்த ஆண் குழந்தை மாதம்பட்டியுடையதுதான் என்பது உறுதியானது. அதன் காரணமாக ஜாய் கிரிஸில்டாவையும், மகன் ராகாவையும் ஏற்றுக்கொண்டார் மாதம்பட்டி. சிந்துபாத் மாதிரி நீண்டுகொண்டிருந்த அவர்களது பிரச்னை ஒருவழியாக இப்போது முடிவுக்கு வந்துவிட்டது.

ஜாய் கிரிஸில்டா பேட்டி: இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கிறார் ஜாய் கிரிஸில்டா. அவர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "நாங்கள் மீண்டும் சேர்ந்ததற்கு குழந்தைதான் காரணம். அதற்கான ஒரு நீதி வாங்கிக்கொடுத்தாச்சு. ஒரு அம்மாவாக குழந்தையை அப்பாவிடமிருந்து பிரிக்க முடியாது. யாருக்குமே அந்த உரிமை கிடையாது. அன்புதான் வெல்லும் என்பது என் விஷயத்தில் உறுதியாகிவிட்டது" என்றார்.

மாதம்பட்டி சொன்னது: இரண்டு பேரும் இப்போது குழந்தையோடு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். அண்மையில்கூட ராகாவுக்கு மொட்டை அடிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் மாதம்பட்டியும் கலந்துகொண்டார். இந்த விவகாரம் குறித்து அவர் வெளியிட்டிருந்த ஒரு அறிக்கையில், "அனைவருக்கும் வணக்கம். எனது மகன் ராகவுக்கு ஒரு தந்தையாக செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் கடந்த ஆறு மாதங்களாக முழு பொறுப்புடனும் அன்புடனும் செய்துவருகிறேன்.

இனி, எனது வாழ்நாள் முழுவதும் ராகா ரங்கராஜின் நலன், மகிழ்ச்சி மற்றும் எதிர்காலத்துக்காக முழு பொற்ப்புடனும், அன்புடனும் துணை நிற்பேன் என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கிறேன்" என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது அவர்களுக்கிடையேயான பிரச்னை முடிந்து சுமூகமான பக்கங்கள் வர தொடங்கியிருப்பதால்; இதே மாதிரியான மகிழ்ச்சியோடு வாழ்ந்து மகனை ஆளாக்க வேண்டும் என்று வாழ்த்துகள் குவிந்துவருகின்றன.