இந்த வாரம் டல்லடிக்கும் தியேட்டர்கள்.. துல்கர் சல்மான், ஜி.வி. பிரகாஷ் குமார் காப்பாற்றுவார்களா?
சென்னை: ஆகஸ்ட் மாதம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ், பெத்லகம் யூனிட், இருமுடி உள்ளிட்ட படங்கள் வெளியாகி 200 கோடி வசூலை ஈட்டி பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பின. லோகேஷ் கனகராஜ் நடிப்பில் வெளியான டிசி படமும் 100 கோடி வசூல் ஈட்டி சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு ஒரு சூப்பர் ஹிட்டை பார்சல் பண்ணியது.
ஆனால், செப்டம்பர் மாதம் தமிழ் சினிமாவில் பெரிதாக டாப் நடிகர்கள் படங்களே இல்லாத சூழல் உருவாகியுள்ளது. கார்த்தியின் சர்தார் 2 மற்றும் சூரியின் மண்டாடி உள்ளிட்ட படங்கள் மட்டுமே ஓரளவுக்கு ரசிகர்களை தியேட்டர்களை நோக்கி கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், செப்டம்பர் மாதம் முதல் வாரம் ரொம்பவே டல்லடித்து காணப்படுவது சினிமா வட்டாரத்தையே ஷாக் ஆக்கியுள்ளது.
காப்பாற்றுவாரா கயாடு லோஹர்?: மமிதா பைஜு நடித்த படங்கள் எல்லாம் 200 கோடி வசூலை ஈட்டிய நிலையில், இந்த வாரம் பெத்லஹகேம் குடும்ப யூனிட் திரைப்படம் தமிழ் டப்பிங்கில் வெளியாகிறது. மேலும், கயாடு லோஹர் நடித்த ஐ அம் கேம் மற்றும் இம்மார்ட்டல் உள்ளிட்ட படங்களில் கயாடு லோஹர் தான் ஹீரோயின் என்பதால், ரசிகர்களை தியேட்டர் பக்கம் கயாடு லோஹர் வரவழைத்தால் தான் உண்டு என்கின்றனர்.
டல்லடிக்கும் டிக்கெட் புக்கிங்: துல்கர் சல்மான் நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள ஐ அம் கேம் திரைப்படம் செப்டம்பர் 3ம் தேதியே வெளியாகிறது. ஆனால், இதுவரை சென்னையில் ஒரு சில தியேட்டர்களில் ஒரு சில காட்சிகள் மட்டுமே அந்த படத்துக்கு கிடைத்துள்ளது. அதுவும் பெரிதாக புக்கிங் ஆகவில்லை. கடைசியாக துல்கர் சல்மான் நடித்த காந்தா படம் தோல்வியை சந்தித்த நிலையில், அவருடைய படத்தை விரும்பி பார்க்க ரசிகர்கள் ரெடியாக இல்லை என்றே தெரிகிறது. படம் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்கள் இருமுடி, பெத்லகேம் குடும்ப யூனிட் போல வந்தால் மட்டுமே ஐ அம் கேம் படம் ஹவுஸ்ஃபுல் ஆகும் என்கின்றனர்.
ஜி.வி. பிரகாஷுக்கு ஹிட் கிடைக்குமா?: ஜி.வி. பிரகாஷ் உடன் இணைந்து நடிக்கும் ஹீரோயின்கள் எல்லாமே உச்சத்துக்கு சென்று விடுகின்றனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் படங்கள் கூட மிகப்பெரிய வெற்றியை பெற்று விடுகின்றன. ஆனால், அவர் ஹீரோவாக நடிக்கும் படங்கள் தான் தொடர்ந்து ஃப்ளாப் ஆகி வருகின்றன. ஜி.வி. பிரகாஷ் - கயாடு லோஹர் நடித்துள்ள ரொமான்டிக் ஹாரர் படமான இம்மார்ட்டல் இந்த வாரம் இளைஞர்களை கொஞ்சம் தியேட்டர் பக்கம் இழுத்தால் தான் உண்டு என்கின்றனர். மொத்தத்தில் இந்த வாரம் ஓடிடியில் தான் ரசிகர்கள் படங்களை பார்க்கப் போகிறார்கள் என்றும் தியேட்டருக்குச் செல்வது கடினம் தான் என தெரிகிறது. செப்டம்பர் மொத்தமும் இதே போல ட்ரை ஆனால், கஷ்டம் தான்.