📅 Saturday, 28 November 2026 IST | கார்த்திகை 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health November 26, 2026 11:03 AM

ஹிரோஷிமா, நாகசாகி: அணுகுண்டு தாக்குதல் நடந்து 80 ஆண்டுகள் நிறைவு

ஹிரோஷிமா, நாகசாகி: அணுகுண்டு தாக்குதல் நடந்து 80 ஆண்டுகள் நிறைவு

ஹிரோஷிமா மற்றும் நாகசாகி குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு, ஜப்பான் சரணடைவதாக அறிவித்தது.

1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று, பேரரசர் ஹிரோஹிட்டோ, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ஜப்பானிய மக்கள் தாங்க முடியாததைத் தாங்கிக் கொள்ளுமாறும், தோல்வியை ஏற்றுக்கொள்ளுமாறும் வலியுறுத்தினார்.

டோக்கியோ விரிகுடாவில் உள்ள யுஎஸ்எஸ் மிசோரி கப்பலில் செப்டம்பர் 2ம் தேதி அதிகாரப்பூர்வமான ஒப்பந்தம் கையெழுத்தானது.

அத்துடன் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.

அணுகுண்டின் ஆபத்து

குண்டு வீசப்பட்ட சில நொடிகளிலேயே அதில் இருந்து காமா கதிர்கள், நியூட்ரான் மற்றும் X கதிர்கள் வெளியாகின. இவை 3 கி.மீ தொலைவிற்கு உள்ள மனித உடல்கள் உள்ளிட்ட அனைத்திலும் ஊடுருவக்கூடிய கண்ணுக்குத் தெரியாத துகள்கள் ஆகும்.

உதாரணமாக, ஹிரோஷிமா குண்டு, தரை மட்டத்தில் இருந்து 600 மீட்டருக்குள் இருந்த 92% மக்களுக்கு ஆபத்தானது.

இந்த குண்டுவீச்சில் இருந்து தப்பியவர்கள் ஹிபாகுஷா என அழைக்கப்பட்டனர். இவர்கள் அதீத வெப்பம் மற்றும் கதிர்வீச்சுகளால் பாதிக்கப்பட்டனர்.

நிறைய பேருக்கு அதீத வெப்பத்தால் உடலில் இருந்து தோல்கள் உறிந்தன.

கதீர்வீச்சு காரணமாக குமட்டல், வாந்தி, ரத்தப்போக்கு மற்றும் முடி உதர்வு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன.

காலப்போக்கில், சிலருக்கு கண்புரை மற்றும் வீரியம் மிக்க கட்டிகள் உருவாகின.

தாக்குதல் நடந்த 5 ஆண்டுகளில், உயிர்ப் பிழைத்தவர்களுக்கு நீண்டகால உடல் உபாதைகள் ஏற்பட்டன. ஹிரோஷிமா, நாகசாகி குடியிருப்பு வாசிகள் மத்தியில் லூகேமியா பாதிப்புகள் அதிகரித்தன.

தாக்குதல் நடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு உயிர்ப் பிழைத்தவர்களுக்கு தைராய்டு, மார்பகம் மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டது. இது வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.

மனரீதியான பாதிப்புகளும் அதிகரித்தன. தாக்குதலின்போது நேரில் கண்ட காட்சிகள், உயிருக்குயிரானவர்களின் இழப்பு, கதிர்வீச்சுகளால் ஏற்படும் நோய்களால் ஏற்படும் அச்சம் காரணமாக ஹிபாக்ஷூக்கள் பயந்தனர்.

தங்களின் தோற்றத்தால் பலருக்கும் தாழ்வுமனப்பான்மை ஏற்பட்டது. இது தொற்று நோயாக இருக்கும் எனவும் நம்பினர்.

பலரும் மற்றவர்களை காப்பாற்ற முடியவில்லையே என்ற குற்ற உணர்வுக்கு ஆளாகினர்.

அணுகுண்டு வீச்சுக்குப் பிறகான வாழ்க்கை

"நான் 6,000 முதல் 10,000 பேருக்கு சிகிச்சை அளித்தேன். அதன்பிறகு நான் மருத்துவராக தொடர விரும்பவில்லை. ஒருவர் பின் ஒருவராக நான் கண்ட அனைவரும் செத்து மடிந்தனர். என்னால் யாரையும் காப்பாற்ற முடியவில்லை."

ஷுந்தரோ ஹிடா, ஹிரோஷிமா

"உயிர் பிழைத்த பெரும்பாலானோர் இப்போது வரை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்"

யாசூகி யமாஷிடா, நாகசாகி

பெரும்பாலான மக்கள் தண்ணீரும், உதவியும்தான் கேட்டனர். எனது வீட்டில் உள்ள கிணற்றுக்கு விரைந்து தண்ணீர் இரைத்துக்கொடுத்தேன். அவர்கள் நன்றி தெரிவித்தனர். சிலர் தண்ணீர் குடித்ததும் ரத்த வாந்தி எடுத்தனர். சிலர் என் கண் முன்னே இறந்துவிட்டனர். நான் மிகவும் வருந்தினேன். பயந்தேன். ஒருவேளை நான் அவர்களை கொன்றுவிட்டேனா?

கெய்கோ ஓகுரா, ஹிரோஷிமா

“எனக்கு 70 வயதான பின்தான் என்னால் இந்த கோர நிகழ்வைப் பற்றி பேச முடிந்தது. அதற்கு முன்பாக நான் பயந்துபோயிருந்தேன். அவர்கள் என்னை புரிந்துகொள்ளமாட்டார்கள் என நினைத்தேன்"

தோஷியோ தனகா, ஹிரோஷிமா

இப்போது ஹிரோஷிமாவும், நாகசாகியும் முக்கியமான தொழில் மற்றும் வணிக நகரங்களாக உள்ளன.

இரு நகரங்களிலும் தாக்குதலால் உயிரிழந்தவர்களை கௌரவிக்கும் வகையில் நினைவு கட்டடம் மற்றும் அருங்காட்சியங்கள் உள்ளன.

இதில் சில ஹிபாகுஷாக்கள் அணு ஆயுதப் பெருக்கத்திற்கு எதிரான ஆர்வலர்களாக மாறிவிட்டனர். போரின் கொடூரங்களை ஒருபோதும் மறக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக தங்களின் கதைகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

“அணு ஆயுதங்களை உடனடியாக ஒழித்தல்” என்பதுதான், தனது முக்கியமான செய்தியாக டெருமி தனகா தனது நோபல் பரிசு உரையில் தெரிவித்தார்.

‘வெகுஜன மக்களைக் கொல்லும் மனிதாபிமானமற்ற ஆயுதங்கள், இவை மனித இனத்துடன் இணைந்திருக்க அனுமதிக்கப்படக்கூடாது" என்று தனகா அணுகுண்டு பற்றி விவரித்தார்.

சர்வதேச அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கான பிரசாரத்தின்படி (ICAN), இன்று உலகில் கிட்டத்தட்ட 12,300 அணு ஆயுதங்கள் உள்ளன.

ஹிபாகுஷாக்கள் அணுசக்தி தடுப்பு கோட்பாட்டை நிராகரிக்கின்றனர். அணுசக்தி உற்பத்தி மற்றும் அச்சுறுத்தல் தாக்குதல்களைத் தடுத்து அமைதியைப் பேண முடியும் என்று நம்பிகின்றனர்.

இத்தகைய பேரழிவின் அச்சுறுத்தலை கடுமையாக எதிர்ப்பவர்களில் மசாகோ வாடாவும் ஒருவர்.

“அணு ஆயுதங்களை பயன்படுத்தி மக்களை துன்புறுத்துவதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள் மாட்டேன்” என்கிறார்.

“இது ஹிரோஷிமா, நாகசாகி போன்ற மற்றொரு தாக்குதல் நிகழலாம் என அர்த்தம்”

சுமார் 90 வயதுடைய 1 லட்சத்திற்கும் குறைவான ஹிபாகுஷாக்கள் இன்று உயிருடன் இருப்பதாக வாடா தெரிவிக்கிறார்.

“அதில் ஆண்டுக்கு 10,000 பேர் இறக்கின்றனர்” என்கிறார். ஆகையால் இன்னும் 10 ஆண்டுகளில் இதில் யாருமே உயிருடன் இருக்க மாட்டார்கள்”

எனினும் அவரது கவலைகள், தற்போது உயிருடன் இருக்கும் நினைவுகள் அழிந்துவிடும் என்பதுதான்.

“அது நடப்பதற்குள் நமக்கு புதிய ஹிபாகுஷாக்கள் கிடைத்துவிடுவர் என்பதுதான் எனது பயம்”

இந்த தொகுப்பு 2020 ஆகஸ்ட் 6ஆம் தேதி வெளியிடப்பட்டது. தற்போது 80ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி, புதிய பேட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன.