📅 Saturday, 28 November 2026 IST | கார்த்திகை 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Health November 27, 2026 09:01 PM

கடலுார் அருகே மீண்டும் பறவை காய்ச்சல் 25 ஆயிரம் கோழிகள் பாதுகாப்பாக அழிப்பு

கடலுார் அருகே மீண்டும் பறவை காய்ச்சல் 25 ஆயிரம் கோழிகள் பாதுகாப்பாக அழிப்பு

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் உள்ள நொச்சிக்காடு கோழிப்பண்ணையில் மீண்டும் பறவை காய்ச்சல் நோய் இருப்பதால் இன்று (நவ.,26) 25 ஆயிரம் கோழிகள் உயிருடன் புதைக்கப்பட்டன.

கடலுார் மாவட்டத்தில் தியாகவல்லி, நொச்சிக்காடு, திருச்சோபுரம், சித்திரைப்பேட்டை, ஆலப்பாக்கம், நடுத்திட்டு, தம்மனாம்படே்டை, சீனுவாசபுரம், கட்டியங்குப்பம், கிருஷ்ணங்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் கோழிப்பண்ணைகள் அமைத்து கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த கோழிகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் செத்து மடிந்தன.

தகவலறிந்த கால்நடைத்துறை அதிகாரிகள் கோழிப்பண்ணைகளில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அவர்கள் வழிகாட்டுதல்படி ஆயிரக்கணக்கான கோழிகள் பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டது. மேலும், உடனடியாக கோழி குஞ்சுகளை இருப்பு செய்ய வேண்டாம் எனவும், 3 மாதங்களுக்கு பண்ணையை காலியாக வைத்திருக்க அறிவுரை வழங்கப்பட்டது.

இறந்த கோழிகளின் மாதிரிகளை நாக்பூர் ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதித்தில், பறவைக்காய்ச்சல் நோயால் கோழிகள் இறந்தது உறுதியானது. மேலும் பாதிக்கப்பட்ட பண்ணைகளில் 90 நாட்களுக்கு கோழிகள் வளர்க்கவோ, விற்பனை செய்யவோ கூடாது என எச்சரிக்கப்பட்டது.

இந்நிலையில் கடலுார் அடுத்த நெச்சிக்காடு பண்ணையில் இருந்த கோழிகள் கடந்த 2 நாட்களாக திடீர், திடீரென இறந்தன. தகவலறிந்த கால்நடைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் இறந்த கோழிகளுக்கு பறவை காய்ச்சல் நோய் இருப்பது உறுதியானது. அதனைத் தொடர்ந்து பண்ணையில் இருந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகளை பாதுகாப்பாக பள்ளம் தோண்டி புதைக்கப்பட்டது.