கடலூர் மாவட்டத்தில், மேலும் ஒரு கிராமத்தில் கோழிப்பண்ணையில் பறவைக் காய்ச்சல் உறுதி!
கடலூர் மாவட்டத்தில், மேலும் ஒரு கிராமத்தில் கோழிப்பண்ணையில் பறவைக் காய்ச்சல் உறுதி!
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் ஆலப்பாக்கம், நொச்சிக்காடு, நடுத்திட்டு, ராசாப்பேட்டை, தமனாம்பேட்டை, கட்டியாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் 16 கோழிப்பண்ணையில் கிட்டத்தட்ட 60,000-தில் இருந்து 80,000 கோழிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கால்நடை துறையும் ஆய்வில் ஈடுபட்டது. அதில் குறிப்பாக கட்டியாங்குப்பம் பகுதியில் இருந்து போபாலுக்கு ஆய்விற்காக அனுப்பப்பட்டது, அதில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து, கட்டியாங்குப்பம் பகுதி ஒட்டுமொத்தமாக தடை செய்யப்பட்டு நோய் தோற்று பகுதியாக அறிவிக்கப்பட்டது.
மேலும், பொது மக்களுக்கும் பறவைக் காய்ச்சல் பரவி இருக்கிறதா என்று ஆய்வு செய்யப்பட்டது. அதேசமயத்தில் உயிரோடு இருந்த கோழிகளை அளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து தற்பொழுது நடுத்திட்டு என்று கிராமத்தில் உள்ள பண்ணையில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதமாக கடலூர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பரவல் வருவது குறிப்பிடத்தக்கது. இதுவரை பல்வேறு பண்ணைகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கோழிகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பண்ணையில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.
மேலும், உயிருடன் உள்ள 1,500 கோழிகளை அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சில நாட்களாக கோழிகள் உயிரிழப்பு இல்லாத நிலையில் மீண்டும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோழிகளை ஆழமான பள்ளம் தோண்டி புதைக்கும் பணியில் கால்நடைத் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.