📅 Friday, 04 September 2026 IST | ஆவணி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 04, 2026 02:00 PM

Immortal X Review

Immortal X Review

சென்னை: மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், கயாடு லோஹர் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் இம்மார்ட்டல். இன்று தியேட்டர்களில் படமானது ரிலீஸானது. சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற சிறப்பு திரையிடலில் படத்துக்கு ஏகோபித்த ஆதரவு கிடைத்தது. இந்நிலையில் இன்று தியேட்டரில் படம் பார்த்தவர்கள் தங்களது விமர்சனத்தை பகிர்ந்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளராக திரைத்துறையில் கரியரை ஸ்டார்ட் செய்த ஜிவி பிரகாஷ் இப்போது பிஸியான ஹீரோவாகவும் வலம் வருகிறார். ஒருபக்கம் இசையமைப்பில் தேசிய விருதும் வெல்கிறார். உடனே இன்னொரு படத்தில் ஹீரோவாகவும் நடிக்கிறார். அவர் கதாநாயகனாக நடித்து தள்ளினாலும் கடந்த சில வருடங்களாக பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும் மனம் தளராமல் தொடர்ந்து நடிக்கிறார். புது புது இயக்குநர்களும் அவரிடம் சென்று கதை சொல்லி கமிட் செய்கிறார்கள்.

இம்மார்ட்டல் ஜிவி: அந்தவகையில் இப்போது மாரியப்பன் சின்னா என்ற இயக்குநர் ஜிவி பிரகாஷை ஹீரோவாகவும், கயாடு லோஹரை ஹீரோயினாகவும் வைத்து இம்மார்ட்டல் படத்தை இயக்கியிருக்கிறார். இது வாம்ப்பயர் ஜானரில் உருவாகியிருக்கிறது. இந்தியாவில் அந்த ஜானரில் படங்கள் வருவது அரிதான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்கள் உழைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த சிறப்பு திரையிடலில் படத்தை கொண்டாடிவிட்டார்கள் ரசிகர்கள்.

இம்மார்ட்டல் எக்ஸ் விமர்சனம்: ஸ்பெஷல் ஸ்க்ரீனிங்கில் கிடைத்த ஆதரவு கொடுத்த ஹைப்போடு இன்று ரிலீஸாகியிருக்கிறது படம். தியேட்டர்களில் படம் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கிறார்கள். படம் பார்த்த இந்த ரசிகர், "படத்தின் தலைப்புக்கு நியாயம் சேர்க்கும் வகையில் படம் இருக்கிறது. குறைவான கேரக்டர்கள்தான் என்றாலும் அவர்கள் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

குறிப்பாக கதிர் மற்றும் மாறனின் காமெடி காட்சிகள் நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருக்கின்றன. விஎஃப்எக்ஸ் பணி டாப். அதேபோல் சாம் சிஎஸ்ஸின் பின்னணி இசை படத்தை தாங்கி பிடிக்கிறது. ஒட்டுமொத்தமாக பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் ஒரு சூப்பர் நேச்சுரல் சர்வைவல் த்ரில்லர். குட் ஒன்" என புகழ்ந்திருக்கிறார்.

அவரைத் தொடர்ந்து இவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "இம்மார்ட்டல் முதல் பாதி நல்ல ரொமான்ட்டிக் ஃபேன்டஸி த்ரில்லர். ஜிவி பிரகாஷும், கயாடு லோஹர் ஆகிய இரண்டு பேருமே சூப்பராக நடித்திருக்கிறார்கள். இடைவேளை காட்சியில் அதிர்ச்சி தரும் வகையில் ஒரு விஷயத்தை அவிழ்க்கிறார்கள். இரண்டாவது பாதிக்கு அருமையாக செட் செய்திருக்கிறார்கள்" என தெரிவித்திருக்கிறார்.

குடும்ப ரசிகர்களும்: அந்த பேஜின் அட்மின், 'இம்மார்ட்டல் சூப்பர். இந்தப் படத்தில் எதிர்பார்க்காத விஷயங்களை எதிர்பார்க்கலாம். ஆச்சரியப்படுத்தும் வகையில் டெக்னிக்கல் விஷயங்கள் எல்லாம் டாப் நாட்ச். குடும்ப ரசிகர்களும் ரசிக்கும் வகையில் படம் இருக்கிறது. ஜிவி பிரகாஷ் அசத்தலாக நடித்திருக்கிறார். அவரது க்தாபாத்திரம், ஸ்க்ரீன் ப்ரெசான்ஸ், குறிப்பாக அவரது லுக் என அனைத்துமே ஸ்டன்னிங். இந்தப் படத்தை தவறவிடாதீர்கள். கண்டிப்பாக பாருங்கள்" என கூறியுள்ளார்.

நடிகர் சொன்னது: நடிகர் அக்‌ஷய் என்பவர், 'இம்மார்ட்டல் முதல் நாள் முதல் காட்சி. தமிழ் சினிமாவுக்கு இது ஒரு வித்தியாசமான கான்செப்ட். கயாடு லோஹர் வழக்கம்போல் அழகாக இருப்பதுடன் அசத்தலான் நடிப்பையும் கொடுத்திருக்கிறார். படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன. சவுண்ட் டிசைனும் அசாதாரணமாக இருக்கிறது. ஜிவி பிரகாஷ் அண்ணாவை நினைத்து மகிழ்ச்சி. ஹேப்பி ராஜ் படத்துக்கு பிறகு கண்டிப்பாக இது ஒரு பிளாக் பஸ்டர்" என உறுதியோடு சொல்லியிருக்கிறார்.