IND vs AFG Test: இந்திய அணியில் இளம் வீரர் மானவ் சுதர் அறிமுகம்.. பிளேயிங் 11, டாஸ் முடிவு என்ன?
IND vs AFG Test: இந்திய அணியில் இளம் வீரர் மானவ் சுதர் அறிமுகம்.. பிளேயிங் 11, டாஸ் முடிவு என்ன?
சண்டிகர்: இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் போட்டி இன்று (ஜூன் 6) சண்டிகரில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். மேலும், இந்திய அணியில் இளம் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான மானவ் சுதர் தனது சர்வதேச டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்றார். அவருக்கு இந்திய அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் டெஸ்ட் தொப்பியை வழங்கி அணியினருடன் இணைந்து வாழ்த்தினார்.
இப்போட்டி நடைபெறும் சண்டிகர் மைதானத்தின் பிட்ச் குறித்துப் பேசிய ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், இந்த மைதானம் பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமாக இருக்கும் என்றும், குறிப்பாக முதல் இரண்டு நாட்களுக்கு பேட்ஸ்மேன்கள் எளிதாக ரன் குவிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது சண்டிகரில் 40 டிகிரி வெப்பத்துடன் கடுமையான வறண்ட வானிலை நிலவுவதால், வெயிலின் தாக்கத்தைத் தாங்கும் வகையில் பிட்ச்சின் மீது லேசான புல் தரை அமைக்கப்பட்டுள்ளது.
ஆட்டத்தின் தொடக்கத்தில் பிட்ச்சின் நடுப்பகுதியில் லேசான ஈரப்பதம் இருக்க வாய்ப்புள்ளதால், இந்திய துவக்க வீரர்கள் ஆரம்பத்தில் நிதானமாக விளையாடி விக்கெட்டைத் தக்கவைத்துக் கொண்டால் பின்னர் பெரிய ஸ்கோர் அடிப்பது எளிதாகும்.
டாஸ் வென்ற பிறகு பேசிய இந்திய கேப்டன் சுப்மன் கில், "இங்கு கடுமையான வெப்பமும் ஈரப்பதமும் உள்ளது. நேரம் செல்லச் செல்ல பிட்ச் மெதுவாக மாறும். எனது சொந்த ஊருக்கு அருகில் வளர்ந்த நான், இங்கு விளையாட வேண்டும் என்று எப்போதும் விரும்பினேன். எனது சொந்த மண்ணில் இந்திய அணியை வழிநடத்துவது எனக்குக் கிடைத்த பெருமை. இந்த போட்டிக்குப் பிறகு நமக்கு 9 டெஸ்ட் போட்டிகள் உள்ளன. எனவே பேட்டிங் வரிசையை பலப்படுத்திக் கொள்வதுடன், சரியான வீரர்களின் கலவையை கண்டறிய விரும்புகிறோம்" என்றார்.
ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாகிதி பேசுகையில், "பிட்ச் நன்றாக இருப்பதால் நாங்களும் முதலில் பேட்டிங் செய்யவே விரும்பினோம். எங்களுக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாட அதிக வாய்ப்புகள் கிடைப்பதில்லை, இருப்பினும் இந்த சவாலை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். காபூலில் நடைபெற்ற பயிற்சி முகாமில் நாங்கள் சிறப்பாகத் தயாராகியுள்ளோம். புதிய பயிற்சியாளர் ரிச்சர்ட் மூலம் நாங்கள் நிறைய விஷயங்களை கற்று வருகிறோம். இந்த போட்டியில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடுகிறோம்" என்றார்.
இரு அணிகளிலும் அறிமுக வீரர்கள்: இந்தப் போட்டியில் இரு அணிகளிலும் தலா ஒரு இளம் வீரர் அறிமுகமாகியுள்ளார். இந்திய அணியில் இளம் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான மானவ் சுதார் இன்று தனது டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்றார். அவருக்கு இந்திய அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் டெஸ்ட் தொப்பியை வழங்கி வாழ்த்தினார். அதேபோல் ஆப்கானிஸ்தான் அணியில் ஆல்-ரவுண்டர் நங்கியாலியா கரோட்டே தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் களம் இறங்குகிறார்.
இந்திய அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட், துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், மானவ் சுதார், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
ஆப்கானிஸ்தான் அணி: செடிகுல்லா அடல், ரஹ்மானுல்லா குர்பாஸ், அப்துல் மாலிக், ரஹ்மத் ஷா, ஹஷ்மத்துல்லா ஷாகிதி (கேப்டன்), அப்சர் ஜசாய், அஸ்மத்துல்லா உமர்சாய், ஷராபுதீன் அஷ்ரப், நங்கியாலியா கரோட்டே, ஜியாவுர் ரஹ்மான், முகமது சலீம்.