📅 Sunday, 29 November 2026 IST | கார்த்திகை 13, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Singapore Tamil November 29, 2026 02:30 PM

முன்னாள் கணவரிடம் மாதம் $30,000 பராமரிப்புக்கோரிய மனு தள்ளுபடி

முன்னாள் கணவரிடம் மாதம் $30,000 பராமரிப்புக்கோரிய மனு தள்ளுபடி

சிங்கப்பூர்: முன்னாள் கணவருடன் பல ஆண்டுகளாக நீதிமன்றங்களில் மோதி வந்த 53 வயது அமெரிக்கப் பெண், அண்மைய மனுவில் தனக்கும் இரு பிள்ளைகளுக்கும் மாதாந்திரச் செலவாக ஏறக்குறைய $30,000 பராமரிப்புத் தொகை கொடுக்கவேண்டும் என்று கோரியிருந்தார்.

வாழ்நாள் முழுவதும் மாதம் $6,000 பராமரிப்புத் தொகையும், பதின்ம வயது மகன்களின் ஆண்டு விடுமுறைச் செலவை $20,000லிருந்து $40,000 ஆக இரட்டிப்பாக்கவும் அவர் கேட்டார். ஏற்கெனவே $1 மில்லியன் சொத்துப் பங்கும் $400,000க்கு மேற்பட்ட பராமரிப்புத் தொகையும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தன.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி சூ ஹான் டெக், வருமானத்துக்குள் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் அல்லது வேலை தேட வேண்டும் என்றும், 56 வயது கனடா நிதி மேலாளரான முன்னாள் கணவர் காலவரையின்றிப் பராமரிக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது என்றும் அப்பெண்ணுக்கு அறிவுறுத்தினார்.

“மணமுறிவு என்பது காலியான காசோலை அல்ல. தற்சார்புடன் வாழ்வதற்குத் தயார்ப்படுத்திக் கொள்ளும்வரை, அதாவது சில ஆண்டுகளே பராமரிப்புத் தொகை வழங்கப்படும்,” என்று அறிவுறுத்திய நீதிபதி, அப்பெண்ணின் மனுவைத் தள்ளுபடி செய்தார்.