📅 Sunday, 30 August 2026 IST | ஆவணி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
ஃபீல் குட் படம்னு பார்த்தா.. ஃபீல் குட் சீரியலா இருக்கு.. ஹாய் படத்தை வறுத்தெடுத்த ப்ளூ சட்டை மாறன்! கிருத்தி சனோனை தொடர்ந்து ஆபாச சர்ச்சையில் சிக்கிய நடிகை செலினா: இணையவாசிகள் கடும் கண்டனம் மலையாளத்தில் மெகா வெற்றியை தொடர்ந்து ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ தமிழ் டிரெய்லர் வெளியானது பிக் பாஸில் ஜாய் கிரிஸில்டா? குழந்தைக்கு 1 வயசு கூட ஆகல.. எல்லாமே பப்ளிசிட்டியா? வெடித்த சர்ச்சை! நான் சபிச்சது உண்மைதான்.. துரோகம் செஞ்சா தண்டனை கிடைக்கும்.. நாஞ்சில் விஜயனுக்கு வைஷூ பதிலடி! ஒன்ஸ் மோர்னு படத்துக்கு டைட்டில் வச்ச நிபுணர் குழு யாருங்க.. ப்ளூ சட்டை மாறன் கலாய் விமர்சனம்!

Cinema August 30, 2026 05:04 AM

காவல் நிலைய பெயர் பலகையில் தனியார் விளம்பரம் திடீர் மறைப்பு: முதல்வர் விஜய் கேள்வியால் அதிரடி

காவல் நிலைய பெயர் பலகையில் தனியார் விளம்பரம் திடீர் மறைப்பு: முதல்வர் விஜய் கேள்வியால் அதிரடி

சென்னை:புழல் காவல் நிலைய பலகையில் இடம்பெற்றிருந்த தனியார் விளம்பரம், முதல்வர் விஜயின் கேள்வியால் மறைக்கப்பட்டு உள்ளது.

தமிழக முதல்வர் விஜய், நேற்று முன்தினம் புழல் மத்திய சிறை, புழல் காவல் நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது, காவல் நிலைய பலகையில், தனியார் விளம்பரம் இருப்பது குறித்து கேள்வி எழுப்பினார்.

காவல்நிலைய பெயர் பலகையில் தனியார் விளம்பரங்கள் இருந்தால், அரசு சொல்வதை செய்வீர்களா அல்லது விளம்பரதாரர்கள் சாதகமாக செயல்படுவீர்களா என, விஜய் கேட்டதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, விஜய் சென்ற பின், காவல் நிலைய பெயர் பலகையில், விளம்பர நிறுவனத்தின் பெயரை, வெள்ளை ஸ்டிக்கர் ஒட்டி போலீசார் மறைத்துள்ளனர்.

விளம்பர நிறுவன பெயர் இன்றி, மாற்று பலகை வைக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சென்னை மட்டுமின்றி மாநிலம் முழுதும், தனியார் நிறுவனம் நன்கொடையால் வைக்கப்பட்ட காவல் நிலைய பலகைகளில், விளம்பர நிறுவன பெயர்களை நீக்கவும் போலீசாருக்கு, உயர் அதிகாரிகள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அதேபோல், போக்குவரத்து ஒழுங்குப்படுத்துதல், கூட்டத்தை சமாளித்தல் போன்ற பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்படும், 'பேரிகார்டு' எனப்படும் இரும்பு தடுப்புகளும் தனியார் நிறுவனங்கள் வாயிலாக வாங்கப்படுகிறது. அவற்றிலும் விரைவில் கட்டுப்பாடுகள் வரும் என, போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.