📅 Sunday, 30 August 2026 IST | ஆவணி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 30, 2026 06:04 AM

கிருத்தி சனோனை தொடர்ந்து ஆபாச சர்ச்சையில் சிக்கிய நடிகை செலினா: இணையவாசிகள் கடும் கண்டனம்

கிருத்தி சனோனை தொடர்ந்து ஆபாச சர்ச்சையில் சிக்கிய நடிகை செலினா: இணையவாசிகள் கடும் கண்டனம்

கிருத்தி சனோனை தொடர்ந்து ஆபாச சர்ச்சையில் சிக்கிய நடிகை செலினா: இணையவாசிகள் கடும் கண்டனம்

மும்பை: ரக்ஷா பந்தன் விழாவில் எல்லைமீறிய கவர்ச்சி ஆடை அணிந்து பங்கேற்றதாக கூறி பாலிவுட் நடிகை செலினா ஜெய்ட்லியை இணையவாசிகள் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாலிவுட் நடிகை கிருத்தி சனோன் ஆடை விளம்பரம் (ஆபாச உடை புகார்) தொடர்பாக ஏற்கனவே பெரும் சர்ச்சை வெடித்திருந்த நிலையில், மும்பையில் நடைபெற்ற ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாட்டத்தில் நடிகை செலினா ஜெய்ட்லி கவர்ச்சியான ரவிக்கை மற்றும் சேலையுடன் கலந்துகொண்டது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்து பண்டிகைகளின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் பாலிவுட் திரையுலகினர் தொடர்ந்து அவமதித்து வருவதாக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இதுகுறித்து பதிவிட்டுள்ள இணையவாசிகள், ‘இந்து பண்டிகையை கொண்டாடும் போது பொட்டு, வளையல் போன்ற பாரம்பரிய அடையாளங்கள் ஏதுமின்றி, கலாசாரத்தை சிதைக்கும் வகையில் கவர்ச்சி ஆடையில் வலம் வருவது ஏற்புடையதல்ல; பாலிவுட் பிரபலங்கள் தங்களது தவறுகளில் இருந்து பாடம் கற்பதே இல்லை’ என்று சரமாரியாக சாடியுள்ளனர். எனினும் இந்த கடுமையான விமர்சனங்களுக்கு நடிகை செலினா ஜெய்ட்லி இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

இதனிடையே, ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக சிறைபிடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள தனது சகோதரரும், ஓய்வுபெற்ற ராணுவ மேஜருமான விக்ராந்த் ஜெய்ட்லியை மீட்க நடிகை செலினா தொடர்ந்து போராடி வருகிறார். மேலும் ஆஸ்திரியாவில் உள்ள தனது பிரிந்த கணவரிடமிருந்து குழந்தைகளை மீட்பதற்கான சட்டப் போராட்டத்திலும் அவர் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.