📅 Sunday, 30 August 2026 IST | ஆவணி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
ஃபீல் குட் படம்னு பார்த்தா.. ஃபீல் குட் சீரியலா இருக்கு.. ஹாய் படத்தை வறுத்தெடுத்த ப்ளூ சட்டை மாறன்! கிருத்தி சனோனை தொடர்ந்து ஆபாச சர்ச்சையில் சிக்கிய நடிகை செலினா: இணையவாசிகள் கடும் கண்டனம் மலையாளத்தில் மெகா வெற்றியை தொடர்ந்து ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ தமிழ் டிரெய்லர் வெளியானது பிக் பாஸில் ஜாய் கிரிஸில்டா? குழந்தைக்கு 1 வயசு கூட ஆகல.. எல்லாமே பப்ளிசிட்டியா? வெடித்த சர்ச்சை! நான் சபிச்சது உண்மைதான்.. துரோகம் செஞ்சா தண்டனை கிடைக்கும்.. நாஞ்சில் விஜயனுக்கு வைஷூ பதிலடி! ஒன்ஸ் மோர்னு படத்துக்கு டைட்டில் வச்ச நிபுணர் குழு யாருங்க.. ப்ளூ சட்டை மாறன் கலாய் விமர்சனம்!

Cinema August 30, 2026 05:04 AM

பிக் பாஸில் ஜாய் கிரிஸில்டா? குழந்தைக்கு 1 வயசு கூட ஆகல.. எல்லாமே பப்ளிசிட்டியா? வெடித்த சர்ச்சை!

பிக் பாஸில் ஜாய் கிரிஸில்டா? குழந்தைக்கு 1 வயசு கூட ஆகல.. எல்லாமே பப்ளிசிட்டியா? வெடித்த சர்ச்சை!

சென்னை: ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் வரும் செப்டம்பர் 6-ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த சீசனையும் நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார். இதுவரை 9 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், 10-வது சீசனில் வழக்கமான பிரபலங்களுடன், சாதாரண மக்களும் போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருக்கின்றனர். அடுத்த வாரம் தொடங்க இருக்கும் இந்த சீசனில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 10: இந்நிலையில், ஜாய் கிரிஸில்டா பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ள இருப்பதாக தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டு புகார் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில், அவரது குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் தான் என்பது உறுதி செய்யப்பட்டது. பின் குழந்தையின் பொறுப்புகளை மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்றுக்கொண்டு அண்மையில் கோவிலில் குழந்தைக்கு மொட்டை அடித்து காது குத்தும் விழாவையும் ஜாய் கிரிஸில்டாவும் மாதம்பட்டி ரங்கராஜும் இணைந்து நடத்தினார்கள்.

எல்லாமே இதுக்குதானா?: இந்த சூழலில், தற்போது ஜாய் கிறிஸ்டிலா பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக வெளியாகியுள்ளது. இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத நிலையில், இணையவாசிகள் பலரும் "குழந்தையின் தந்தை பெயருக்காக போராடியவர், குழந்தைக்கு ஒரு வயது கூட ஆகாத நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லப் போகிறாராம்?, இப்போது தான் அந்த போராட்டத்தின் பின்னணி என்ன என்று புரிகிறது, பப்ளிசிட்டிக்காகத்தான் இவ்வளவு நடந்ததா? என சிலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதே நேரத்தில், ஜாய் கிறிஸ்டிலாவின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் குழந்தை தொடர்பான முடிவுகளை வைத்து அவரை விமர்சிப்பது சரியா என்ற கேள்வியையும் சிலர் எழுப்பி வருகின்றனர். எது எப்படியிருந்தாலும், ஜாய் கிறிஸ்டிலா உண்மையிலேயே பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாரா என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்போதுதான் தெரியவரும்.