📅 Sunday, 30 August 2026 IST | ஆவணி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
ஃபீல் குட் படம்னு பார்த்தா.. ஃபீல் குட் சீரியலா இருக்கு.. ஹாய் படத்தை வறுத்தெடுத்த ப்ளூ சட்டை மாறன்! கிருத்தி சனோனை தொடர்ந்து ஆபாச சர்ச்சையில் சிக்கிய நடிகை செலினா: இணையவாசிகள் கடும் கண்டனம் மலையாளத்தில் மெகா வெற்றியை தொடர்ந்து ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ தமிழ் டிரெய்லர் வெளியானது பிக் பாஸில் ஜாய் கிரிஸில்டா? குழந்தைக்கு 1 வயசு கூட ஆகல.. எல்லாமே பப்ளிசிட்டியா? வெடித்த சர்ச்சை! நான் சபிச்சது உண்மைதான்.. துரோகம் செஞ்சா தண்டனை கிடைக்கும்.. நாஞ்சில் விஜயனுக்கு வைஷூ பதிலடி! ஒன்ஸ் மோர்னு படத்துக்கு டைட்டில் வச்ச நிபுணர் குழு யாருங்க.. ப்ளூ சட்டை மாறன் கலாய் விமர்சனம்!

Cinema August 30, 2026 05:04 AM

ஒன்ஸ் மோர்னு படத்துக்கு டைட்டில் வச்ச நிபுணர் குழு யாருங்க.. ப்ளூ சட்டை மாறன் கலாய் விமர்சனம்!

ஒன்ஸ் மோர்னு படத்துக்கு டைட்டில் வச்ச நிபுணர் குழு யாருங்க.. ப்ளூ சட்டை மாறன் கலாய் விமர்சனம்!

சென்னை: இந்த வாரம் வெளியான 3 படங்களையுமே வரிசையாக கழுவி ஊற்றியுள்ளார் ப்ளூ சட்டை மாறன். டாக்ஸிக் படத்தை வச்சு உலகமே செய்துக் கொண்டிருக்க, ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் பெரிதாக இல்லை என்றே சொல்லலாம்.

ஆனால், நயன்தாரா, கவின் நடித்த ஹாய் படம் ஃபீல் குட் படம் என பலர் விமர்சித்து வரும் நிலையில், அது வெறும் ஃபீல் குட் சீரியல் தான் என சோலியை முடித்து விட்டார்.

அடுத்து கடைசியாக அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் நடித்த ஒன்ஸ் மோர் பக்கம் வண்டியை திருப்பி டோட்டல் டேமேஜ் செய்துள்ளார்.

ப்ளூ சட்டை மாறன் ஒன்ஸ் மோர் விமர்சனம்: இந்த வாரம் வெளியான படங்களில் ஒன்ஸ் மோர் படமும் அதிகப்படியான நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. முதல் நாள் வசூல் வெறும் 30 லட்சத்துக்கும் மேல் தான் என்பது படத்தின் ரிசல்ட்டை காட்டி விட்டது.

இந்நிலையில், ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் இந்த படத்துக்கு ஒன்ஸ் மோர் என டைட்டில் வைத்த நிபுணர் குழுவுக்கு ரொம்பவே தைரியம் தான். படத்தை ஒரு முறையே பார்க்க முடியவில்லை. இதில், ஒன்ஸ் மோர் என டைட்டில் வேறு என பங்கம் பண்ணியுள்ளார்.

ஆரம்பத்தில் இருந்தே அர்ஜுன் தாஸ் இறுக்கமான முகத்துடன் ரொம்பவே சீரியஸாக இருக்க, இது ஸ்லோ பர்னர் படம் என பொறுமையாக காத்துக் கொண்டிருக்க, இடைவேளைக்குப் பிறகு தான் தெரிந்தது இது சோம்பேறித் தனமான படம் என ஒரே போடாக போட்டு இந்த படத்தின் சோலியையும் இந்த வாரம் முடித்து விட்டார்.

பாவம் அர்ஜுன் தாஸ்: வில்லனாக கலக்கிக் கொண்டிருந்த அர்ஜுன் தாஸை நீங்க ரொமாண்டிக் ஹீரோ சார் என உசுப்பி விட்டு வரிசையாக காதல் படங்களில் அவரை நடிக்க வைத்து கஷ்டப்படுத்தி வருகின்றனர் என்றும் மறுபடியும் கைதி, குட் பேட் அக்லி போல களத்தில் இறங்கி நெகட்டிவிட்டியில் மிரட்டினால் வெற்றிகள் குவியும் என்றும் கூறுகின்றனர்.