📅 Saturday, 05 September 2026 IST | ஆவணி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 05, 2026 03:01 PM

கல்தா கொடுத்த பாஜக... தி.மு.கழகத்துடன் கைக்கோர்க்கும் டி.டி.வி…?

கல்தா கொடுத்த பாஜக... தி.மு.கழகத்துடன் கைக்கோர்க்கும் டி.டி.வி…?

கல்தா கொடுத்த பாஜக... தி.மு.கழகத்துடன் கைக்கோர்க்கும் டி.டி.வி…?

பாஜக - அதிமுக கூட்டணியில் அதிருப்தியாக உள்ள டிடிவி தினகரன், புதிய அரசியல் பாதையை தேடி அறிவாலயத்தின் கதவை தட்ட உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை பெற்றுள்ளது.

தமிழ்நாடு அரசியலில் கூட்டணி நகர்வுகள் எப்போது வேண்டுமானாலும் மாறக்கூடியவை. கடந்த கால நண்பர்கள் எதிரிகளாகவும், எதிரிகள் நண்பர்களாகவும் மாறுவது அரசியலில் புதிதல்ல. அந்த வகையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டி.டி.வி. தினகரனை சுற்றி புதிய அரசியல் பேச்சுகள் உருவாகியுள்ளன.

பாஜக கூட்டணியில் எதிர்பார்த்த அரசியல் முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்ற அதிருப்தி தினகரன் தரப்பில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. குறிப்பாக, எதிர்கால தேர்தல் கணக்குகளில் தனக்கான முக்கிய இடம் வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தினகரன் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சி புதிய அரசியல் போட்டியை உருவாக்கியுள்ளது. விஜய் தலைமையிலான கட்சி இளைஞர்கள் மத்தியில் வேகமாக கவனம் பெற்றுவரும் நிலையில், அவரை எதிர்கொள்ளும் வகையில் புதிய அரசியல் கூட்டணிகள் உருவாகலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.

இந்த சூழலில், திமுக தரப்பில் இருந்து தினகரனுடன் பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்புகள் குறித்து அரசியல் வட்டாரங்களில் விவாதங்கள் நடக்கின்றன.

தினகரனின் தென்மாவட்ட செல்வாக்கு, குறிப்பிட்ட சமூக வாக்கு வங்கி, அமமுகவின் அமைப்பு பலம் ஆகியவை கூட்டணியில் முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகின்றன. மறுபுறம், திமுகவுடன் இணைவது தினகரனின் அரசியல் எதிர்காலத்திற்கு சாதகமாக இருக்குமா என்ற கேள்வியும் எழுகிறது.

த.வெ.க.வை வீழ்த்த வேண்டும் என்ற மூடில் உறுதியாக இருக்கும் தினகரன், இன்னமும் அதற்கான தீவிர செயல்பாடுகளை அதிமுக தொடங்காததால், எடப்பாடி மீது அதிருப்தியில் இருக்கிறார் என்றும், அதன்விளைவாக, தீவிரமாக தவெ.கவை எதிர்த்துவரும் நம்முடன் நிச்சயம் கை கோப்பார் என்றும் சித்தரஞ்சன் சாலையில் திமுக தலைமை நடத்திய ரகசிய மீட்டிங்கில் டிஸ்கஸ் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவல்களை எல்லாம் உன்னிப்பாக கேட்டு உள்வாங்கிக்கொண்ட ஸ்டாலின் 'செப்டம்பர் 15ம் தேதியன்று நடைபெறவிருக்கும் முப்பெரும் விழா முடியட்டும். பிறகு இதில் எந்த வியூகத்தை நடைமுறைப்படுத்தலாம் என்பதை அனைவருடனும் கலந்து பேசி முடிவெடுக்கலாம்' என்றிருக்கிறாராம்.

பாஜகவுக்கு குட்பை சொல்லி அறிவாலயத்தை நோக்கி தினகரன் நகர்வாரா? அல்லது புதிய அரசியல் கணக்கா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.