📅 Saturday, 28 November 2026 IST | கார்த்திகை 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News November 27, 2026 04:02 PM

குடிமைத் தற்காப்புப் படை ஊழியர்களுக்கு எதிராக 46 துன்புறுத்தல் சம்பவங்கள் பதிவு

குடிமைத் தற்காப்புப் படை ஊழியர்களுக்கு எதிராக 46 துன்புறுத்தல் சம்பவங்கள் பதிவு

2026ஆம் ஆண்டு ஜனவரி தொடங்கி இதுவரை சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையின் முன்கள ஊழியர்களுக்கு எதிராக 46 துன்புறுத்தல் சம்பவங்கள் நடந்துள்ளன.

ஜூன் பிற்பகுதிவரை 17 சம்பவங்களே பதிவாகியிருந்தன.

முன்கள ஊழியர்களுக்கு எதிரான எந்தவொரு துன்புறுத்தலையும் சகித்துக்கொள்ள முடியாது என்றும் உடனடியாகக் காவல்துறையில் புகார் அளிக்கப்படும் என்றும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.

மேலும், 2025ஆம் ஆண்டில் நாள்தோறும் ஏறத்தாழ 700 அவசர மருத்துவ அழைப்புகளுக்குப் பதிலளித்ததாகவும் அது கூறியது.

உடல்ரீதியான அல்லது வாய்மொழித் துன்புறுத்தல் ஊழியர்களின் கடமைக்கு இடையூறு விளைவிப்பதாக அது குறிப்பிட்டது.

ஜூன் முதல் ஆகஸ்ட் வரை இடைப்பட்ட காலத்தில் அவசர மருத்துவப் பணியாளர்களைத் தாக்கிய இருவருக்குச் சிறைத்தண்டனையும் ஏப்ரல் மாதம் மருத்துவ உதவியாளரைத் தகாத வார்த்தைகளால் வசைப்பாடியவருக்கு 11 வாரச் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

பொதுச் சுகாதாரத் துறையிலும் அத்தகைய சம்பவங்கள் நடந்தன. 2023ஆம் ஆண்டில் 2,200ஆகப் பதிவான அச்சம்பவங்கள் 2025ஆம் ஆண்டில் 4,200ஆக உயர்ந்ததாகச் சுகாதாரத் துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம் செப்டம்பர் 30ஆம் தேதி தெரிவித்தார்.

அரசாங்க ஊழியரைக் கடமையாற்ற விடாமல் தடுக்கக் காயம் விளைவிப்போருக்கு ஏழாண்டுகள் வரை சிறை, அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.