📅 Friday, 27 November 2026 IST | கார்த்திகை 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
அகல்விளக்கு பதிப்பக உரிமையாளரை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க மனு: சிறப்பு நீதிமன்றத்தில் நாளை உத்தரவு வியப்புக்குரிய வித்தகப் பிரதமர்! சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் நினைவு நாளில் தனியார் பள்ளிகளிடம் வசூல்; மாஜி எம்எல்ஏ வாக்குமூலத்தால் திமுக மகேஷ் மனைவிக்கு சிக்கல் ஊட்டி தாவரவியல் பூங்கா புல் மைதானத்தில் உணவுத் திருவிழாவுக்காக அரங்குகள் அமைக்கும் பணி விறுவிறு நிதிஷ் குமார் பவுலிங்கை விட சிராஜ் பவுலிங் திறன் கம்மினு இந்திய அணி நினைக்கிறது.. அஸ்வின் கிண்டல் AUS vs ENG: 108 ரன்களில் சுருண்ட ஆஸ்திரேலியா.. 5 விக்கெட் வீழ்த்திய சிஎஸ்கே வீரர் ஜெமி ஓவர்டன்

Latest News November 27, 2026 10:32 PM

நிதிஷ் குமார் பவுலிங்கை விட சிராஜ் பவுலிங் திறன் கம்மினு இந்திய அணி நினைக்கிறது.. அஸ்வின் கிண்டல்

நிதிஷ் குமார் பவுலிங்கை விட சிராஜ் பவுலிங் திறன் கம்மினு இந்திய அணி நினைக்கிறது.. அஸ்வின் கிண்டல்

நிதிஷ் குமார் பவுலிங்கை விட சிராஜ் பவுலிங் திறன் கம்மினு இந்திய அணி நினைக்கிறது.. அஸ்வின் கிண்டல்

மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய பிளேயிங் லெவனில் முகமது சிராஜ் மீண்டும் புறக்கணிக்கப்பட்டது குறித்து முன்னாள் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அணி நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர்களுக்கான வரிசையில் சிராஜ், ஆல்ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டிக்கு பின்னால் தள்ளப்பட்டிருக்கலாம் என்றும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

சிராஜ் நீக்கப்பட்டது குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய அஸ்வின், "சிராஜ் ஆடும் லெவனில் இடம்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்ற செய்தியே இதன் மூலம் வெளிப்படுகிறது. வேகப்பந்து வீச்சாளர்களின் வரிசையில் அவர் இப்போது நிதிஷ் குமார் ரெட்டிக்கு பின்னால் தள்ளப்பட்டுள்ளார்.

சிராஜ் தற்போது மனதளவில் மிகவும் சோர்ந்துபோயிருப்பார். அவருடன் யாராவது பேசி, அவரது குறைகளைக் கேட்கவும் சரியான வழிகாட்டுதலை வழங்கவும் வேண்டும் என்று நம்புகிறேன். இது சிராஜுக்கு நல்லபடியாக முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை" என்று கூறினார்.

"மைதானங்கள் மாறினாலும் நிலைமை ஒன்றாகவே இருக்கிறது. சிராஜ் ஒரு உணர்ச்சிமிக்க மனிதர் என்பதால் அவர் நிலை குறித்து வருந்துகிறேன். இன்று சிராஜுக்கு நடப்பது நாளை வேறு யாருக்கும் நடக்கலாம். அணிக்குள் உண்மையிலேயே ஒரு நிலையற்ற தன்மை உருவாக்கப்பட்டு வருகிறது. குர்னூர் ப்ரார் ஏழாவது பந்துவீச்சாளராக டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டதாக செய்திகள் வந்தபோதே சிராஜ் இந்த போட்டியில் விளையாட மாட்டார் என்பதை நான் உணர்ந்தேன்" என்று தெரிவித்தார்.

நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் சிராஜ் 11 போட்டிகளில் விளையாடி 26.81 சராசரியில் 43 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய இந்திய பந்துவீச்சாளராக உள்ளார். இதில் இரண்டு முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதும் அடங்கும். ஒட்டுமொத்தமாக 46 டெஸ்ட் போட்டிகளில் 29.74 சராசரியில் 140 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார். இந்தியாவின் முந்தைய இலங்கைத் தொடரின் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடிய அவர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.

சிராஜ் மீண்டும் அணிக்குள் திரும்புவது எளிதல்ல என்று குறிப்பிட்ட அஸ்வின், "அடுத்த வாய்ப்பு கிடைக்கும்போது அவர் மணிக்கு 145 கி.மீ வேகத்தில் பந்துவீசி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இந்த அணி நிர்வாகம் கடந்த காலத்தில் சிறப்பாகச் செயல்பட்டவர்களைத் தவிர்த்து முற்றிலும் புதிய பாதையில் செல்வது தெளிவாகத் தெரிகிறது. சிராஜுக்கு இது எளிதான கதையாக இருக்காது" என்று கூறியுள்ளார்.