📅 Tuesday, 11 August 2026 IST | ஆடி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 10, 2026 08:04 PM

முத்தமிழறிஞர் கலைஞர் உதிரம் சிந்தி வளர்த்த மூத்த பிள்ளை முரசொலி! : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவு

முத்தமிழறிஞர் கலைஞர் உதிரம் சிந்தி வளர்த்த மூத்த பிள்ளை முரசொலி! : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவு

முத்தமிழறிஞர் கலைஞர் உதிரம் சிந்தி வளர்த்த மூத்த பிள்ளை முரசொலி! : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவு

சென்னை: கழக உடன்பிறப்புகளின் இதயத்துடிப்பு - தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றின் நாட்குறிப்பு - முத்தமிழறிஞர் கலைஞர் உதிரம் சிந்தி வளர்த்த மூத்த பிள்ளை முரசொலி. அதன் அலுவலகத்திற்குச் சென்று, என் மூத்த சகோதரனுக்கு 85-ஆவது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்!

முரசொலி என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) அதிகாரப்பூர்வ நாளிதழ் மற்றும் கொள்கைப் பரப்பு ஏடாகும். இது 10 ஆகஸ்ட் 1942 அன்று முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியால் தொடங்கப்பட்டது. இன்று (10 ஆகஸ்ட் 2026) இந்த நாளிதழ் தனது வெற்றிகரமான 85-ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது

இரண்டாம் உலகப் போரின் போது, தனது 18-ஆவது வயதில் மு. கருணாநிதி அவர்களால் திருவாரூரில் துவங்கப்பட்டது. ஆரம்பத்தில் "சேரன்" என்ற புனைபெயரில் கருணாநிதி அவர்களால் கையெழுத்துப் பிரதியாக எழுதப்பட்டு, பின்னர் துண்டுப் பிரசுரமாக விநியோகிக்கப்பட்டது. காகிதப் பற்றாக்குறையால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, 14 ஜனவரி 1948 முதல் வார இதழாக மீண்டும் வெளியானது.

1954ம் ஆண்டில் இதன் தலைமையகம் சென்னையம்பதிக்கு மாற்றப்பட்டது. 17 செப்டம்பர் 1960 முதல் இது தினசரி நாளிதழாகத் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. திராவிட இயக்கத்தின் கொள்கைகள், சமூக நீதி, மற்றும் மாநில சுயாட்சி கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முக்கியப் ஆயுதமாக விளங்குகிறது

மு. கருணாநிதி அவர்கள் "உடன்பிறப்பே" என்று தொண்டர்களுக்கு எழுதிய புகழ்பெற்ற கடிதங்கள் இந்த ஏட்டின் மூலமே பிரசுரிக்கப்பட்டன. முரசொலி மாறன் மற்றும் முரசொலி செல்வம் ஆகியோர் இதன் வளர்ச்சிக்கும் தலையங்கப் பணிகளுக்கும் மிக முக்கியப் பங்காற்றியுள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முரசொலிக்கு 85 வது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். கழக உடன்பிறப்புகளின் இதயத்துடிப்பு - தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றின் நாட்குறிப்பு - முத்தமிழறிஞர் கலைஞர் உதிரம் சிந்தி வளர்த்த மூத்த பிள்ளை முரசொலி. அதன் அலுவலகத்திற்குச் சென்று, என் மூத்த சகோதரனுக்கு 85-ஆவது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்!

தலைவர் கலைஞர், முரசொலி மாறன், முரசொலி செல்வம் என முரசொலியைத் தொடர்ந்து செழுமையாக வளர்த்தார்கள். நானும் முரசொலிக்காகப் பார்க்காத வேலையே இல்லை என்னும் அளவுக்கு, அனைத்து நிலைகளிலும் பணியாற்றி இருக்கிறேன்.

அறிவிப்புப் பலகைகளாக மட்டுமே இயங்கும் பல அரசியல் கட்சி இதழ்களுக்கு இடையே, கருத்தாழமிக்க கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், பொங்கல் மலர், பாசறைப் பக்கம் என அறிவாலயத்தின் அறிவாயுதமாகத் திகழும் முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க! அதன் பணிகளில் வெல்க!