நவ.30-ல் கூடுகிறது நாடாளுமன்றம்
நவ.30-ல் கூடுகிறது நாடாளுமன்றம் - தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல?
ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர், குளிர்கால கூட்டத்தொடர் ஆகியவை பல்வேறு அமர்வுகளாக நடத்தப்படுவது வழக்கம் ஆகும்.
Published : November 26, 2026 at 8:14 PM IST
புதுடெல்லி: வரும் நவ.30-ல் நாடாளுமன்ற மக்களவை கூடவுள்ளதாக மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
அரசின் அத்தியாவசிய அலுவல் பணிகளை மேற்கொள்வதற்காக வரும் நவ.30- ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவை அமர்வும், டிச.02- ஆம் தேதி மாநிலங்களவை அமர்வும் நடைபெறும் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில், "அரசின் அத்தியாவசியமான பணிகளை மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற மக்கலவையை வரும் நவ.30- ஆம் தேதி திங்கட்கிழமை அன்றும், மாநிலங்களவையை வரும் டிச.02- ஆம் தேதி புதன்கிழமை அன்றும் கூட்டுமாறு மக்களவை சபாநாயகர் மற்றும் மாநிலங்களவைத் தலைவர் ஆகியோரிடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தேவையை பொருத்து இரு அவைகளின் கூட்டத்தொடரும் வரும் டிச.03- ஆம் தேதி நிறைவுப் பெறும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
The Government has requested Hon’ble Speaker, Lok Sabha and Hon’ble Chairman, Rajya Sabha to reconvene Lok Sabha on Monday, 30th November, 2026 and Rajya Sabha on Wednesday, 2nd December, 2026 respectively to transact essential Government Business. Subject to exigencies of the Business, the sitting of both Houses may conclude on 3rd December, 2026.
இந்த கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மசோதா மற்றும் பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதா ஆகிய இரண்டு மசோதாக்களையும் தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கூட்டப்படாதது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், தற்போது இக்கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் முறைப்படி முடித்து வைக்கப்படாத நிலையில் மீண்டும் கூடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர், குளிர்கால கூட்டத்தொடர் ஆகியவை பல்வேறு அமர்வுகளாக நடத்தப்படுவது வழக்கம்.