📅 Thursday, 26 November 2026 IST | கார்த்திகை 10, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business November 26, 2026 04:04 PM

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 121 கிலோ தங்கம் காணிக்கை; வியக்க வைத்த தமிழக பக்தர்

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 121 கிலோ தங்கம் காணிக்கை; வியக்க வைத்த தமிழக பக்தர்

திருமலை: ஆந்திராவின் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு, தமிழகத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் 121 கிலோ எடையுள்ள தங்க ஆபரணங்களை ஏழுமலையானுக்குக் காணிக்கையாக வழங்கியுள்ளார். 45 ஆபரணங்களைக் கொண்ட இந்தக் காணிக்கையின் மதிப்பு ரூ.160 கோடி. இது திருமலை கோவில் வரலாற்றில் தனிநபர் ஒருவரால் வழங்கப்பட்ட மிகப்பெரிய காணிக்கையாகும்.

ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் திருமலை கோவில் அதிகாரிகளிடம் இந்த 121 கிலோ தங்க ஆபரணங்கள் ஒப்படைக்கப்பட்டன. ஏழுமலையானை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அலங்கரிக்கும் வகையில் இந்த 45 ஆபரணங்களும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இக்காணிக்கையை வழங்குவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட பக்தர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துடன் ஆலோசனைகளை மேற்கொண்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பக்தர் கேட்டுக்கொண்டதன் பேரில், அவரது பெயர் மற்றும் விபரங்களை கோவில் நிர்வாகம் வெளியிட வில்லை.