📅 Saturday, 28 November 2026 IST | கார்த்திகை 12, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu November 27, 2026 12:33 AM

நவம்பர் 30ல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: 20 மாவட்டங்களில் இன்று மழை

நவம்பர் 30ல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: 20 மாவட்டங்களில் இன்று மழை

நவம்பர் 30ல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு: 20 மாவட்டங்களில் இன்று மழை

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 18 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், வரும் நவம்பர் 29ம் தேதி தெற்கு அந்தமான் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி உருவாகும் எனவும், அது 30ம் தேதி குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருமாறி, டிசம்பர் 2ம் தேதி வாக்கில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடையைக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சுமார் 1.5 கிமீ உயரம் வரை குமரிக்கடல் பகுதியிலிருந்து தமிழகம் மற்றும் கேரளம் வழியாக தெற்கு உள் கர்நாடகா வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இன்று தேனி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

நாளை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.