“பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.48 ஆக உயர்த்துக”
மு.வீரபாண்டியன்
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை ரூபாய் 48 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டுமென தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தொடர்ந்து போராடி வருகிறது. இந்நிலையில் கடந்த 19 ம் தேதி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தமிழ்நாடு முதல்வர் விஜய், பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூபாய் 38 லிருந்து 41 ஆக அதிகரிக்கப்படும் என அறிவித்தார்.
இது வரவேற்பிற்குரியது என்றாலும் கூட, பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.48 ஆக உயர்த்த வேண்டும் எனக் கோரி போராடி வருகின்றனர்.
எனவே, மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட பால் உற்பத்தியாளர்களின் பொருளாதார நலனை, வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, உடனடியாக பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூபாய் 48 ஆக தமிழ்நாடு அரசு உயர்த்தி வழங்கிட வேண்டும்.
அதேசமயம் நுகர்வோருக்கு பாலின் விலையை அதிகரித்துவிடக் கூடாது. அதற்கேற்ப உரிய மானியங்களை தமிழ்நாடு அரசு ஆவின் நிறுவனத்துக்கு வழங்கிட வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது’ எனத் தெரிவித்துள்ளார்.