PAK vs ENG: இங்கிலாந்திடம் சரணடைந்த பாகிஸ்தான்.. முதல் டெஸ்டில் பரிதாபம்.. 4 பவுலர்களே கதையை முடித்தனர்
PAK vs ENG: இங்கிலாந்திடம் சரணடைந்த பாகிஸ்தான்.. முதல் டெஸ்டில் பரிதாபம்.. 4 பவுலர்களே கதையை முடித்தனர்
லீட்ஸ்:இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸ் நகரில் இன்று தொடங்கியது. ஓய்வு பெற்ற பின் ஜோ ரூட் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இதேபோன்று பயிற்சியாளர் மெக்குல்லம் விலகிய நிலையில் பிளமிங் இங்கிலாந்து அணிக்கு தலைமைப் பயிற்சியாளராக பதவியேற்ற பின் நடைபெறும் முதல் டெஸ்ட் தொடர் இதுவாகும். பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை பாபர் அசாம் கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பயிற்சி ஆட்டத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த போட்டியின் அவர் பங்கேற்கவில்லை.
இதனால் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சல்மான் ஆகா பொறுப்பேற்றார்.இந்த நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் அசான் அவாய்ஸ் ஆட்டத்தின் முதல் பந்திலே கோல்டன் டக் ஆகி வெளியேறினார்.
இதேபோன்று நட்சத்திர வீரரான ஷான் மசூத் ஐந்து ரன்கள் மட்டுமே எடுத்தார். இதை அடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு இமாம் உல் ஹக்குடன் சேர்ந்து அப்துல் ஷபிக் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தனர். இதில் இமாம் உல் ஹக் 42 ரன்களிலும் அப்துல்லா ஷபிக் அதிகபட்சமாக 61 ரன்களும் எடுத்தனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சவுத் சக்கில் ஐந்து ரன்களிலும் கேப்டன் சல்மான் ஆகா 21 ரன்களிலும் வெளியேறினார். அந்த அணியின் நட்சத்திர வீரரான முஹம்மத் ரிஸ்வான் 12 ரன்கள் மட்டுமே எடுக்க பின் வரிசை வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் பாகிஸ்தான் அணி 48.1 ஓவர் மட்டுமே தாக்குப்பிடித்து 171 ரன்கள் சேர்த்தது.
இங்கிலாந்து பந்துவீச்சில் ஆலிவ் ராபின்சன் மற்றும் ஜாஸ் டோங்க் ஆகியோர் தலா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். இங்கிலாந்து அணி வெறும் 4 வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்தி பாகிஸ்தான் இன்னிங்சை முடித்தது. இதனை அடுத்து இங்கிலாந்து அணி தங்களுடைய முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் அதிரடி வீரர் பென் டக்கட் 15 ரன்களிலும் எமிலியோ கே 33 ரன்களும் எடுத்தனர். தற்போது 11 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்துள்ளது.