📅 Thursday, 20 August 2026 IST | ஆவணி 4, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News August 20, 2026 12:03 AM

பாகிஸ்தான் நடத்தும் முத்தரப்பு தொடர்.. 2 பெரிய அணிகள் பங்கேற்பு.. வெளியான அட்டவணை

பாகிஸ்தான் நடத்தும் முத்தரப்பு தொடர்.. 2 பெரிய அணிகள் பங்கேற்பு.. வெளியான அட்டவணை

பாகிஸ்தான் நடத்தும் முத்தரப்பு தொடர்.. 2 பெரிய அணிகள் பங்கேற்பு.. வெளியான அட்டவணை

லாகூர்: பாகிஸ்தான்,இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான முத்தரப்பு கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. வரும் அக்டோபர் 9 முதல் நவம்பர் 21 வரை நடைபெறவுள்ள இந்தத் தொடரில், மூன்று நாடுகள் பங்கேற்கும் ஒருநாள்முத்தரப்பு தொடரும் அடங்கும்.

அக்டோபர் 9 முதல் 13 வரை ராவல்பிண்டியில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருடன் இலங்கை அணி தனது பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தைத் தொடங்குகிறது என்று பிசிபி அறிவித்துள்ளது.

இந்த டி20 தொடரைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணி இவ்விரு அணிகளுடன் இணைந்து முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இப்போட்டிகள் அக்டோபர் 18 முதல் 31 வரை ராவல்பிண்டி மற்றும் லாகூர் ஆகிய மைதானங்களில் நடைபெறவுள்ளன.

முத்தரப்பு தொடர் முடிந்த பிறகு, இலங்கை அணி பாகிஸ்தானிலேயே தங்கி நவம்பர் 4 முதல் இஸ்லாமாபாத்தில் தொடங்கும் மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில் விளையாடவுள்ளது. அதன் பின்னர், இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறும்.

இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 சைக்கிளில் ஒரு பகுதியாக அமையும். இதில் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 9 முதல் 13 வரை ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்திலும், இரண்டாவது போட்டி நவம்பர் 17 முதல் 21 வரை லாகூரில் உள்ள கடாபி மைதானத்திலும் நடைபெறும்.

தற்போதைய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் பாகிஸ்தான் தனது சொந்த மண்ணில் விளையாடும் இரண்டாவது டெஸ்ட் தொடர் இதுவாகும். இதற்கு முன்னதாக, கடந்த ஆண்டு அக்டோபரில் தென் ஆப்பிரிக்கா அணி பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முத்தரப்பு ஒருநாள் தொடரை நடத்தவுள்ளது. இதற்கு முன்பாக, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடருக்கு முன்னதாக பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் பங்கேற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரை நடத்தியிருந்தது. டி20 தொடரில் பங்கேற்பதற்காக அக்டோபர் 4ஆம் தேதி இலங்கை அணி பாகிஸ்தான் வந்தடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.