Latest News
September 06, 2026 02:04 AM
பஞ்., தலைவர் கொலை தொழிலாளிக்கு 'காப்பு'
திருநெல்வேலி: குடிநீர் பிரச்னை தகராறில் ஊராட்சி தலைவர் மகாராஜன், 58, என்பவரை செங்கலால் தாக்கி கொலை செய்த தொழிலாளி இசக்கியப்பன், 40, கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே, கண்ணநல்லுார் ஊராட்சி தாமரைகுளத்தை சேர்ந்த ஊராட்சி தலைவர் மகாராஜனிடம், அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி இசக்கியப்பன், தன் வீட்டிற்கு இரு நாட்களாக குடிநீர் வரவில்லை என, நேற்று முன்தினம் கேட்டுள்ளார்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், இசக்கியப்பன், ஆத்திரத்தில் செங்கலை எடுத்து மகாராஜன் மீது வீசியதில், நெற்றியில் பட்டு, அவர் உயிரிழந்தார். இசக்கியப்பனை வள்ளியூர் போலீசார் கைது செய்தனர்.
குடிநீர் குழாயில் ஏற்பட்ட பிரச்னை மற்றும் வீட்டின் அருகே தெருக்குழாய் அமைக்காதது தொடர்பான தகராறில் கொலை நடந்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
Latest News