போதை பொருள் வழக்கு.. கைது செய்யப்படும் துளசி.. கெட்டி மேளம்!
சென்னை: துளசியின் மீது கடும் கோவத்தில் இருக்கும் மீனாட்சி, இன்ஸ்பெக்டரை சந்தித்து துளசியின் எம்எல்ஏ பதவியை காலி செய்ய வேண்டும் என சொல்கிறாள். உடனே அந்த இன்ஸ்பெக்டர் வெற்றிக்கு ஆட்டோ வாங்கி வாங்கி கொடுத்தது துளசி தான். இதனால், வெற்றியின் ஆட்டோவில் போதை பொருளை வைத்து அவனை கைது செய்துவிடலாம். ஆட்டோ துளசி பெயரில் இருப்பதால், அவளையும் கைது செய்து விடலாம். இன்னைக்கு வெள்ளிக்கிழமை சனி,ஞாயிறு கோர்ட் லீவு என்பதால் இரண்டு நாள் போலீஸ் கண்ட்ரோல் தான், இரண்டு பேரையும் என்ன வேணும்னாலும் செய்யலாம் என சொல்கிறார்.
கெட்டிமேளம்: இன்றைய எபிசோடில், மீனாட்சியின் திட்டத்தின் படியே ஆட்டோவில் இருந்து பல லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் கண்டெடுக்கப்பட போலீஸ் வெற்றியை கைது செய்து ஸ்டேஷனுக்கு அழைத்து செல்கின்றனர். எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை இது கஸ்டமர் கொண்டு வந்த பை என சொல்கிறார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் அந்த கஷ்டமரை ஸ்டேசனுக்கு வர வைத்து விசாரிக்க, அவர் நான் போன் பண்ணது உண்மை தான். ஆனால், இவர் வராததால் நானே நேரடியாக சென்று அந்த பார்சலை கொடுத்துவிட்டேன் என்கிறார்.
கைது செய்யப்படும் துளசி: கஸ்டமர் இப்படி மாற்றி பொய் சொன்னதால்,இதில் ஏதோ பிரச்சனை இருப்பதை புரிந்து கொண்ட வெற்றி, நீங்க ஏதோ திட்டத்தோடு தான் இருக்கீங்க, நான் நிரபராதி என்பதை நிரூபிப்பேன் என்று சொல்கிறார். மேலும் போதைப் பொருள் கடத்தல் கேசில் துளசிக்கும் பங்கு இருக்கலாம் என்று சொல்லி போலீஸ் அவளையும் கைது செய்ய கிளம்புகின்றனர். அத்தனையும் ஏற்பாடு செய்த மீனாட்சி 10 பெண்களை துளசியின் வீட்டிற்கு வெளியே நிற்க வைத்துஇருக்கிறாள். துளசியை போலீசார் கைது செய்து அழைத்துச் செல்லும்போது அவளை அவமானப்படுத்தி முகத்தில் கறியை பூச வேண்டும் என சொல்கிறாள். போலீஸ் துளசியை சந்தேகத்தின் பேரில் துளசி கைது செய்து அழைத்து வர, அங்கு இருந்த ஆட்கள் துளசியை அவமானப்படுத்துகின்றனர். அஞ்சலி என் அக்கா மேல தப்பு இருக்காது என்று சொல்லியும் போலீஸ் ஏற்க மறுக்கின்றனர். இதில் ஏதோ தப்பு இருக்கு என அஞ்சலி உண்மையை கண்டுபிடிக்க முடிவெடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கெட்டி மேளம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.