ரேவதிக்கு மருதுடன் விடிந்தால் கல்யாணம் நடக்கப்போவது என்ன? கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் சனிக்கிழமை எபிசோடில், ரோகினி ரேவதியிடம் உனக்கு கார்த்தி மேல காதல் இருக்கு அதை ஏன் வெளியே சொல்ல மாட்டுற என்று கேட்க, கார்த்தி கண்டிப்பா இந்த கல்யாணத்தை நிறுத்துவாரு, அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு என சொல்கிறாள். அடுத்து ரேவதியுடன் எல்லோரும் மண்டபத்திற்கு வருகை தர ரேவதிக்கு பார்க்கும் இடம் எல்லாம் கார்த்தி நிற்பது போல தோன்றுகிறது.
இன்றைய எபிசோடில், மண்டபத்தில் கார்த்திக் எப்போது வருவார் என ரேவதி வாசலை பார்த்துக்கொண்டு இருக்கிறாள். இதைப்பார்த்த மயில்வாகனம், ரோகினி, ஸ்வாதி ஆகியோர் ரேவதியிடம் மனசுல கார்த்திக் தான் இருக்காரு என எங்க எல்லாருக்குமே தெரியும், அப்படி இருக்கும் போது நீ ஏன்.. இந்த கல்யாணம் வேண்டாம்னு சொல்ல கூடாது என்று கேட்க கார்த்திக் இந்த கல்யாணத்தை நிறுத்திடுவாரு அப்படி அவர் இங்கே வந்ததும், நான் அவரிடம் என் மனதில் இருப்பதை சொல்வேன் என்கிறாள்.
கார்த்திகை தீபம்: மறுபக்கம் மண்டபத்தற்கு மீனா, அவரின் அப்பா இருவரும் வந்து சாமுண்டீஸ்வரியிடம், நீங்க பார்த்து இருக்கும் மாப்பிள்ளை ரொம்ப மோசமானவன். பெண்களை ஆபாசமா போட்டோ எடுத்து அதை வைத்து மிரட்டி பணம் சம்பாதிப்பவன் என்று சொல்கிறார். ஆனால், சாமுண்டீஸ்வரி இதை நம்ப மறுக்கிறாள். பின் மீனா என் அப்பா சொல்வது உண்மை தான், இவன் தான் ரெட் என்று சொல்ல, சந்திரகலா, எங்கே உண்மை தெரிந்துவிட்டால், இந்த கல்யாணம் நடக்காமல் போய்விடும் என்ற பயத்தில் இதுக்கெல்லாம் ஆதாரம் இருக்கா, கல்யாணத்தை நிறத்த அந்த கார்த்திக் போடும் நாடகம் என்று சொல்லி அவர்களை வெளியில் அனுப்புகிறாள்.
கார்த்திக்கை தேடும் ரேவதி: மறுபக்கம், கார்த்திக் திருமணத்திற்கு வராததால், பதற்றத்தில் இருக்கும் ரேவதி, அக்கா ரோகிணியிடம் சென்று விசாரிக்க அவளும் இன்னும் வரவில்லை என்று சொல்கிறாள். இதனால் ரேவதி கார்த்திக்கு போன் செய்து எங்க இருக்கீங்க என்று கேட்க, அவன் மருதுவால் பாதிக்கப்பட்ட பெண்ணை பாப்பதற்காக ஹாஸ்பிடலில் இருப்பதால், ஹாஸ்பிடலில் இருப்பதாக சொல்கிறான். மேலும் இப்போதைக்கு என்னால் வர முடியாது எனவும் சொல்கிறான். இதனால் ரேவதி கார்த்திக் இருக்கும் இடத்தை கேட்டுக்கொண்டே அவனை கையோடு அழைத்து வர இங்கிருந்து கிளம்பி செல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.