📅 Thursday, 27 August 2026 IST | ஆவணி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 26, 2026 11:04 PM

புதிதாக இயக்கப்படும் 130 தாழ் தள மின்சார குளிர்சாதன பஸ்கள்: எந்தெந்த இடங்களில் வழித்தடங்கள்..?

புதிதாக இயக்கப்படும் 130 தாழ் தள மின்சார குளிர்சாதன பஸ்கள்: எந்தெந்த இடங்களில் வழித்தடங்கள்..?

சென்னையில் 2-ம் கட்டமாக 750 ஏ.சி. மின்சார பஸ் சேவையை முதல்-அமைச்சர் விஜய் இன்று (செவ்வாய்கிழமை) தொடங்கி வைத்தார்.

மின்சார பஸ்கள் இயக்கம்

சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கத்தில், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் முதல் கட்டமாக ரூ.697 கோடி மதிப்பீட்டில் 625 தாழ்தள மின்சார பஸ்கள் வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, சென்டிரல் பணிமனை மற்றும் தண்டையார்பேட்டை-1 ஆகிய 5 பணிமனைகளில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து, 2-ம் கட்டமாக 750 புதிய தாழ்தள குளிர்சாதன மின்சார பஸ்கள் ஆலந்தூர், சென்டிரல் பணிமனை-2, பெரம்பூர், பாடியநல்லூர், ஆவடி, கே.கே.நகர் மற்றும் அய்யப்பன்தாங்கல் ஆகிய 7 பணிமனைகளில் இருந்து இயக்கப்பட உள்ளது. இந்த மின்சார பஸ்கள் இயக்கத்தை முதல்-அமைச்சர் விஜய் சென்னை தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வழித்தடங்கள்

இந்நிலையில் புதிதாக இயக்கப்படும் 130 தாழ்த்தள மின்சார குளிர்சாதன பஸ்களுக்கான வழித்தடங்களை சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.