Latest News
August 19, 2026 08:30 AM
ரஷ்யா
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 18) மியன்மார் தலைவர் மின் ஆவ்ங் ஹ்லாய்ங்குடன் பல்வேறு அம்சங்களைப் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
நடைமுறைக்கு வரக்கூடிய எரிசக்தி ஒப்பந்தங்கள் குறித்தும் பேசப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளிடமிருந்து வரும் நெருக்குதலுக்கு மத்தியில் இச்சந்திப்பு இருநாடுகளுக்கும் இடையிலான உறவு வலுப்படுத்தப்படுவதற்கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.
மியன்மார் ராணுவத் தலைவராக இருந்த மின் ஆவ்ங் ஹ்லாய்ங் கடந்த ஏப்ரல் மாதம் அந்நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்றார். அதற்குப் பிறகு அண்டை நாடாக இல்லாத ஒரு நாட்டுக்கு அவர் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.