📅 Monday, 31 August 2026 IST | ஆவணி 15, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 31, 2026 10:00 AM

ரஜினியை மோசமாக பேசுகிறார்கள்.. யாரை சொல்கிறார் ஜிவி பிரகாஷ்?.. டார்கெட் விஜய் ரசிகர்கள்?

ரஜினியை மோசமாக பேசுகிறார்கள்.. யாரை சொல்கிறார் ஜிவி பிரகாஷ்?.. டார்கெட் விஜய் ரசிகர்கள்?

சென்னை: ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக மட்டுமின்றி ஹீரோவாகவும் கலக்கிவருகிறார். அடுத்ததாக அவரது நடிப்பில் இம்மார்ட்டல் படம் வரவிருக்கிறது. இதில் அவருக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடித்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்புதான் ட்ரெய்லர் வெளியாகி சூப்பர் ரெஸ்பான்ஸை பெற்றது. இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது

இசையமைப்பாளராக சினிமாவுக்குள் வந்த ஜிவி பிரகாஷுக்கு நடிக்கும் ஆசை வந்தது. அதன்படி ஹீரோவாக நடிக்க தொடங்கினார். சிகப்பு மஞ்சள் பச்சை, சர்வம் தாளமயம், பேச்சிலர் உள்ளிட்ட சில படங்கள் மட்டுமே அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தன. இருப்பினும் எப்படியாவது ஒரு ஹீரோவாக மிகப்பெரிய வெற்றியை கொடுத்திட வேண்டும் என்பதில் முனைப்போடு இருக்கிறார்.

ஜிவி பிரகாஷின் இம்மார்ட்டல்: அடுத்ததாக அவரது நடிப்பில் இம்மார்ட்டல் செப்டம்பர் நான்காம் தேதி ரிலீஸாகவிர்க்கிறது. இதில் அவருக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடித்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு வெளியான படத்தின் ட்ரெய்லர் சூப்பர் வரவேற்பை பெற்றிருக்கிறது. கண்டிப்பாக இப்படமாவது அவருக்கு நல்லதொரு வெற்றியை கொடுக்கும் என்ற ஆவலிலும், நம்பிக்கையிலும் இருக்கிறார்.

இசையமைப்பை விடாத ஜிவி: ஹீரோவாக அவர் பிஸியாக நடித்தாலும் இசையமைப்பிலும் மும்முரமாக இருக்கிறார். சூரரைப் போற்று, வாத்தி, அமரன் உள்ளிட்ட படங்களுக்கு தேசிய விருதையும் பெற்றார். கடைசியாக அவரது இசையமைப்பில் இருமுடி, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என வரிசையாக படங்கள் வந்தன. இந்நிலையில் சமீபத்தில் அவர் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சோஷியல் ட்ரெண்டாகியுள்ளது.

ஜிவி பிரகாஷ் பேட்டி: அவர் கொடுத்திருந்த பேட்டியில், "சோஷியல் மீடியாக்களில் வன்மத்தோடு பேசுபவர்களை ஒன்றும் செய்ய முடியாது. ரஜினி ஒரு புகைப்படத்தை போஸ்ட் செய்தாலே அதற்கு கீழே நிறைய மோசமான கமென்ட்ஸ்களை பார்க்கிறேன். இதனால் ரஜினியின் புகழ் குறைந்துவிடுமா என்ன? நீங்கள் போடும் மோசமான கமென்ட்ஸ்களால் ரஜினியின் ஸ்டேட்டஸ் எதுவும் குறைந்துவிடாது. சூரியன் எப்போதுமே சூரியன்தான்.

முன்னேற முடியாது: ஒருவர் மீது இப்படி மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி அவரை தாழ்த்தி பேசுவதை எல்லாம் தொடர்ந்து கவனித்தால் நாமும் அதற்குள் போய்விடுவோம். வாழ்க்கையில் நம்மால் முன்னேறவே முடியாது. நெகட்டிவ் கமென்ட்டுகள் போடுவதெல்லாம் ஒருவகையிலான சாடிசம். அந்த கமென்ட்டுகளுக்கு எல்லாம் நீங்கள் முக்கியத்துவம் கொடுத்தால் அது உங்களுக்குத்தான் தோல்வி" என விளாசியிருக்கிறார்.

யாரை சொல்கிறார்?: ஜிவியின் இந்தப் பேட்டி சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது. அதுமட்டுமின்றி ரஜினி என்ன போஸ்ட் போட்டாலும் பெரும்பாலும் அதில் விஜய் ரசிகர்கள்தான் மோசமான கமென்ட்ஸ்களை போடுவார்கள். அது ஊரறிந்த ஒன்று. விஷ்ணு விஷால் கட்டா குஸ்தி 2 சமயத்தில் இதே மாதிரி ரஜினியை வைத்து ஒரு விஷயத்தை பேசியிருந்தார்.

அதற்கும் விஜய் ரசிகர்கள் மோசமான அர்ச்சனையை கொடுத்தார்கள். இப்போது ஜிவி பிரகாஷும் இந்தப் பேட்டியின் மூலம் விஜய் ரசிகர்களைத்தான் மறைமுகமாக கூறியிருக்கிறார். இது பாராட்டப்பட வேண்டிய ஒன்று என்று பலரும் அவருக்கு ஆதரவு கொடுத்துவருகிறார்கள்.